News Update :
Home » » திண்டுக்கல் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல்வீச்சு vinayagar Chaturthi procession near Dindigul fight tahsildar injured

திண்டுக்கல் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல்வீச்சு vinayagar Chaturthi procession near Dindigul fight tahsildar injured

Penulis : Tamil on Tuesday 10 September 2013 | 21:40

vinayagar Chaturthi procession near Dindigul fight tahsildar injured

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் 56 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைப்பதற்காக நேற்று மாலை ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலம் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தை கடந்து பெரிய பள்ளிவாசல் பகுதி அருகே சென்றகொண்டிருந்த போது, திடீரென ஒரு மர்ம கும்பல் சிலைகளை நோக்கி கல்வீசியது.

இந்த கல்வீச்சில் அந்த வழியாக சென்ற 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் ஊர்வல பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வந்த நிலக்கோட்டை தாசில்தார் சங்கரநாராயணனுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அந்தப் பகுதியில் நின்ற பொதுமக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தினரைக் கலைத்தனர். இதையடுத்து கல் வீசியவர்களை கைது செய்யக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிலைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை வத்தலக்குண்டு – மதுரை சாலையில் உள்ள உசிலம்பட்டி பிரிவு அருகே நிறுத்தி விட்டு, இந்து முன்னணி அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
சம்ப இடத்திற்கு வந்த திண்டுக்கல் சரக டி.எஸ்.பி. அறிவுச்செல்வம், பெரிய பள்ளிவாசல் அருகே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கல் வீசப்பட்டதால் போலீசார் மீண்டும் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.
மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மீண்டும் எடுத்து சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், வத்தலக்குண்டு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger