News Update :
Powered by Blogger.

கூடங்குளம் : 3 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு

Penulis : karthik on Thursday, 13 September 2012 | 05:05

Thursday, 13 September 2012



கூடங்குளம் : 3 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு கூடங்குளம் : 3 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதை உடனே கைவிட வலியுறுத்தி இடிந்தகரையில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூடங்குளம் கடற்கரையில் நடந்த தடியடி மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து இடிந்தகரை தேவாலயத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்திய 48 மணி நேர உண்ணா�® �ிரதம் நேற்று முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து புதிய போராட்டமாக இன்று முற்பகலில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆண்கள் கடலுக்குள் சற்று தொலைவிலும் பெண்கள் à ��ரைக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் கை கோர்த்து மனித சங்கிலியாக நின்று கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் லைப் ஜாக்கெட் அணிந்தபடி கடலுக்குள் இறங்கியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக இந்த போராட்டத்தில் இறங்கியிருப்பதால் அனேகமாக இது தினசரி போராட்டமாக உருவெடுக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. அனைவரும் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தà �¿ முழக்கமிட்டு வருகின்றனர்.

விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு

கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடற்படைக்குச் சொந்தமான கண்காணிப்பு விமானம் தாழப் பறந்து மீனவர்களை கண்காணித்து வருகிறது. இதேபோல் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றும் கூடங்குளம் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது. கூடங்குளம் à ��ணு உலை மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் பாதுகாப்பு கருதி கடற்படை விமானமும், கப்பலும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெசேஜ் அனுப்பிய உதயகுமார்

இன்றைய போராட்டத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்தும் அவர் தலைமறைவாகவே இருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து வருவதாக தெரிகிறது. இதனிடையே தாமே போராட்டத்துக்கு தலைமை ஏற்று வருகிறேன்.. அதனால் போரட ்டத்தை உறுதியோடு முன்னெடுப்போம் என்று மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.



/

comments | | Read More...

ஓல்டு ஜோக்ஸ் 2

ஓல்டு ஜோக்ஸ் 2

நீங்க கல்யாணத்தை ரொம்ப சிக்கனமா நடத்துங்க.. வேணாங்கலை! அதுக்காக ஜானவாசத்துல காருக்குப் பதிலா நீங்க என்னை உப்பு மூட்டை தூக்கிண்டு போறது கொஞ்சம் கூட நல்லாயில்லே!

                             எம்.பூங்கோதை.

டாக்டர்! ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா பல்லு கூசுது டாக்டர்!
என்னசெய்யலாம் டாக்டர்?
 சுடவெச்சு சாப்பிடுங்க!
                       நாணி.

இங்கபார்! நீ பணக்காரியா இருக்கலாம்!அதுக்காக நாம லவ் பண்ற இடத்துக்கெல்லாம் கூடவே ஒரு வேலைக்காரியை கூட்டிகிட்டு வர்றது நல்லா இல்லே!
                         கடலூர் சார்லி.

எங்க தாத்தா சாமியாரா போயிட்டாருடா!
இந்த வயசில சாமியாரா போயி என்னத்தை பண்ன போறாருடா!
                          நிலா.

டாக்டர்! எனக்கு அடிக்கடி முன்கோபம் வருது!
எவ்வளவு நாளா இப்படி?
எவ்வளவு நாளா இருந்தால் உனக்கென்னடா முண்டம்?
                             சந்தியூர் வி. கோவிந்தன்.

அந்த டாக்டருக்கு நிமிஷத்துக்கு நூறு 'கால்' வந்துகிட்டு இருக்கும்!
கால்ராசியான டாக்டருன்னு சொல்லு!
                          ஷைலு

என்னது e.n.t ஸ்பெஷலிஸ்ட் கேள்விப்பட்டிருக்கேன். இந்த டாக்டர் e.n.d ஸ்பெஷலிஸ்டா?
ஆமாங்க அவர் கிட்ட போனா முடிவு நிச்சயம்!
                        வாணியம்பாடி ராஜ்குமார்.

நான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன் டாக்டர் கேட்கலை!
 என்னாச்சு?
தான் செய்யப்போற முதல் ஆபரேசன்ங்கிறதாலே வார்டுக்குள்ளேயே ஹோமம் நடத்தினாரு.புகையில மூச்சடைச்சு பேஷண்ட் காலி!
                             ஆர்.சிவகுமார்.

ரிஷப வாகனம் பார்த்தியா?
இல்லையே!
ரிஷபவாகனம் பார்க்காதவங்க அடுத்த ஜென்மத்துல கழுதையா பொறப்பாங்களாம் தெரியுமா?
அப்ப போன ஜென்மத்துல நீ ரிஷப வாகனம் பார்க்கலீயா?
                         பாஸ்கி.

உன்னுடைய முதலாளி கடிதங்களை நடந்துகிட்டே டிக்டேட் செய்வாரா?
ஐயையோ! அவர் அப்படி நடக்க ஆரம்பிச்சால் அவருடைய மடியில் இருந்து நான் கீழே விழுந்துவிடுவேனே!
                         கே.பி.ஜவஹர் குமார்.
ராமசாமிங்கிற உன் பேரை ஏன் ரங்கசாமின்னு மாத்திகிட்டே?
என் பேருல தலைவர் கோபமா இருக்கிறதா சொன்னாங்களே!
                         மேல்குந்தை வாசு.

சார் பிளேன்ல முதல் முதலா நாடகம் நடக்குது!எல்லோரும் சிரிச்சிகிட்டு இருக்காங்க! நீங்க மட்டும் சீரியஸா இருக்கீங்களே!
விஷயம் தெரிஞ்சா நீங்களும் சிரிப்பை நிறுத்திடுவீங்க!
 என்ன விஷயம்?
ஹீரோ வேஷத்துல நடிச்சிகிட்டு இருக்கறது நம்ம பைலட்!
                              நாணி.

நேத்து நான் மூணு போஸ்ட் மார்ட்டம் பண்ணினேன் டாக்டர்!
சும்மா ரீல் விடாதே! நான் நேத்து ரெண்டு ஆபரேசன் தான் பண்ணேன்!
                     வாணியம்பாடி ராஜ்குமார்.

உங்களுக்கு ஒரே ஸன்னா?
நாம எல்லோருக்கும் ஒரே ஸன் தான் காலையில் வந்து மாலையில மறையும்!
                       பாஸ்கி

ஏண்டி முனியம்மா! உனக்கு என் புருஷன் குங்குமம் வாங்கித் தந்தாராமே?
 அதெல்லாம் ஆறுமாசத்துக்கு முன்னாடி இப்ப குங்குமபூ பால் வரைக்கும் வந்தாச்சு!
                                ஆர்.சிவகுமார்.

சொன்னதெல்லாம் கேக்கற நாய் ஒண்ணு வளர்த்தியே இப்ப எங்கேடி அது காணோம்!
எனக்குத்தான் இப்ப கல்யாணம் ஆயிடுச்சே அதனால அதை வித்துட்டேன்!
                            தஞ்சை தாமு.

ஏன் தினமும் லேட்டா வர்றீங்க?
ஒண்ணுமி.ல்.லேடி!
யார் அந்த லேடின்னுதான் கேக்கறேன்!
                         இளங்கம்பன்.

ஏண்டி வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டே?
அவ நம்ம பையன்கிட்ட ஒரு மாதிரியா பழகறா?
அடிப்பாவி! அப்பனுக்கே துரோகம் பண்ண துணிஞ்சுட்டானா உன் பையன்?
                           க.சு.

டிபன் பாக்ஸில வெச்சிருந்த ஸ்பூன் எங்கேடா?
அதுக்குள்ளே வச்சிருந்த எல்லாத்தையும் மிச்சமில்லாம சாப்பிடனும்னு நீதானேம்மா சொன்னே!
                    எஸ்.சேகர்.

ஐயையோ என்னது உங்க வயத்துல பல்லு முளைச்சிருக்கு!
பயப்பட ஒன்னுமில்லே! அவசரத்துல சாப்பிடும்போது பல்செட்டை சேத்து முழுங்கிட்டேன்!
                            நாணி.

ஏன்யா! நீ எல் போர்டு சரி! எதுக்குயா ரெண்டு போர்டு வண்டியிலே மாட்டியிருக்கே!
 ஒண்ணு எனக்கு! பின்னாலே உட்கார்ந்திருக்காரே அவருக்கு ஓன்னு! இவர் இப்பத்தான் வண்டியில உக்கார கத்துக்கிறாரு!
                                  நாணி.

நம்ம ஏரியா ஆஸ்பத்திரியிலே குண்டு வெடிச்சுதாமே எப்படி?
 டாக்டர் வழக்கம் போல பேஷண்ட் ஒருத்தரோட கிட்னியை திருடி பீரோவிலே வெச்சிருக்காரு! அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு அது 'பெல்ட்பாம்'னு!
                              பாஸ்கி.
இந்த கேஸ்ல நீங்க வாதியா? பிரதி வாதியா?
 பயங்கரவாதி எடு! பத்தாயிரம் ரூபாயை!
                     கோவி. கோவன்.

நம்ம இன்ஸ்பெக்டருக்கு என்னை சுத்தமா பிடிக்கலை!
 என்ன ஆச்சு!
தப்பிச்சு போன கடத்தல் காரனோட கார் நம்பரை சொன்னா முன்பக்க நம்பரை ஏன் நோட் பண்ணலைங்கிறாரு!
                      பாஸ்கி.

கேடி ரவியை கைதுபண்ணி ஒரு நாளாவது லாக்கப்புல போடனும்னு பாக்கறேன் முடியலை!
 ஏன் தப்பிச்சிடறானா?
சேச்சே போனா ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்திடறான்!
                             நிலா.

அவர்தான் 'மியாவ்'ங்கிற பேர்ல கதை எழுதறவர்!
ஓ! 'பூனை' பெயரா?
                       ராஜாசிங் ஜெயக்குமார்.

நன்றி! ஆனந்தவிகடன்,
 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
comments | | Read More...

Why you should have sex at least once a week இதப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

Penulis : karthik on Wednesday, 12 September 2012 | 23:10

Wednesday, 12 September 2012

Why you should have sex at least once a week
Why You Should Have Sex At Least Once A Week

ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை மனிதர்களின் வெற்றிக்கு ஊக்க சக்தியாக இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். செக்ஸ் புத்துணர்ச்சி தரும் மன அழுத்தம் போக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஆரோக்கியமான ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது தம்பதியர் தாம்பத்ய உறவில் ஈடுபடவேண்டும் என்கின்றனர்.

செக்ஸ் மூலம் மனிதர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் காதலுடன் உங்களின் துணையை அழுத்தமாக சில நிமிடங்கள் கட்டிப் பிடித்துக்கொண்டிருந்தாலே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுகிறதாம். அதேசமயம், ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 75 முதல் 85 வயதுடைய நபர்களும் பங்கேற்றனர். ஆய்வின் போது அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வாரத்திற்கு ஒருமுறை தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதிகள் ஆரோக்கியமாகவும், சுறுப்பாகவும் காணப்படுவதாக தெரிவித்தனர். அதேசமயம் உறவில் ஈடுபடாத தம்பதிகள் உடல் சோம்பலாக இருப்பதாக கூறியுள்ளனர்.

30 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியரை விட 55 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியர் உடல் ஆரோக்கியம் சீராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது தெரியவந்தது. வயதானாலும் இறுதி காலம் வரை ஆரோக்கியத்தைப் பொருத்து உறவில் ஈடுபடவே பெரும்பாலான தம்பதியர் விரும்புகின்றனர் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger