News Update :
Powered by Blogger.

என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த் பேட்டி

Penulis : karthik on Monday, 30 July 2012 | 02:24

Monday, 30 July 2012




தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- 
தி.மு.க. நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது. பிரபாகரன் உயிரோடு இருந்தபோது அவரை தி.மு.க. தலைவர் கருணாநிதி காப்பாற்றவில்லை. இன்று முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். 

எனது ரிஷிவந்தியம் தொகுதியில் கால்வாய் தூர்வாருவத ற்காக தமிழக அரசிடம் ரூ.14 கோடி கேட்டேன். ஆனால் தரவில்லை. சென்னையில் காலரா வாந்தி-பேதியால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். ஆனால் இதை மேயர் ஏற்க மறுக்கிறார். 

என்னை ஒரு பிரதான எதிர்க்கட்சி தலைவராக முதல்வரும், அமைச்சர்களும் மதிக்கவில்லை. எனவே மக்களை நேரில் சந்திக்க இருக்க� �றேன். ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை மக்களுக்காக மக்கள் பணி செய்வதற்கு ஒரு மாதம் தீவிர சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறேன். 

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்து இருக்கிறது. நெல்லையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சட்டம்-ஒழு ங்கு சீர்கெட்டு வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு மாதமாக கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அங்கிருந்து திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்வதாக அறிக்கை விடுகிறார். ஆனால் எந்த திட்டமும் செயல்பட்டதாக தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது எங்கள் விருப்பம். துணை ஜனாதிபதி தேர்தலையும் தே.மு.தி.க. புறக்கணிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு விஜயகாந்த் ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். நிகழ்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தலைமை நிலைய செயலாளர் ப ார்த்தசாரதி எம்.எல்.ஏ., இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.








comments | | Read More...

34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பேஸ்புக் மூலம் சேர்ந்தார்





லண்டனை சேர்ந்த சூசன் ஆர்டிரான் என்பவர் தனது கணவர் சிட் மற்றும் 4 குழந்தைகளுடன் கடந்த 1975ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் குடியேறி வசித்து வந்தார். 1978ம் ஆண்டில் ஒரு கார் விபத்தில் சூசனுக்கு மனநிலை பாதித்தது. அதன்� �ின், அவர் தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டார். நோய் முற்றி தன்னை பற்றியே அறியாதவராக சூசன் இருந்த நிலையில், அவரை ஒரு சாலையோரமாக விட்டுவிட்டு கணவர் வீடு திரும்பினார். பின்னர், குழந்தைகளுடன் சிட் மீண்டும் லண்டனுக்கு சென்று குடியேறினார். சூசன் காணாமல் போய் விட்டதாக, சூசனின் குடும்பத்தினரிடம் சிட் கூறி விட்டார்.

இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் சூசனை காப்பாற்றிய ஒரு குடும்பத்தினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே, சூசனின் சகோதரர் மற்றும் சகோதரிகள் அவரை கண்டுபிடிப்பதற்காக ரெட்கிராஸ் உள்பட பல அமைப்புகளின் மூலம் முயற்சித்தனர். அதற்கு எந்த பலனும் இல்லாததால் அந்த முயற்சியை கைவிட்டனர்.
தற்போது 61வயதை எட்டி விட்ட சூசன் பூரண குணம் அடைந்து பழைய நினைவுகள் திரும்பி விட்டது. அவர் தனது குழந்தைகளை பார்க்க விரும்பினார். அவருக்கு உதவிய குடும்பத்தினர் அதற்காக இங்கிலாந்தில் தெரிந்தவர்கள் மூலம் தேடிப் பார்த்தனர்.

அதில் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், பேஸ்புக்கில் சூசன் படத்தை போட்டு, அவரத ு கணவர், குழந்தைகள், குடும்பத்தினர் விவரங்களை குறிப்பிட்டனர். இதை பார்த்த சூசனின் சகோதரிகள் டான், ஜூலி, கெயில், சகோதரர் கோலின் ஆகியோர் உடனடியாக சூசனை தொடர்பு கொண்டு பேசினர். தனது குழந்தைகளை சூசன் மறக்காமல் பெயர் சொல்லி கூப்பிட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது லண்டனுக்க� �� வரவிருக்கும் சூசனுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.







comments | | Read More...

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ தங்கம் பரிசு-சகாரா நிறுவனம் அறிவிப்பு

Penulis : karthik on Friday, 27 July 2012 | 02:54

Friday, 27 July 2012





லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் இந்தியருக்கு, 5 கிலோ தங்கம் அளிக்க போவதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் வழங்க சகாரா நிறுவனம் முன்வந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. இதில் 204 நாடுகளை சேர்ந்த மொத்தம் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் சுமார் 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் மொத்தம் 13 விளையாட்டுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியாவில் இருந்து அதிகளவிலான வீரர்கள், வீராங்கனைகள், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதால், இந்த முறை நாட்டிற்கு அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகமடையும் வகையில், சகாரா நிறுவனம் ஒரு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியர்களில் தங்கப்பதக்கம் வெல்லும் நபருக்கு 5 கிலோ தங்கம் வழங்கப்பட உள்ளது. வெள்ளிப் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலம் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் பரிசளிக்க உள்ளதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் குழு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கம் பெறும் அணியின் வீரர்களுக்கு, தங்கம் பகிர்ந்து அளிக்கப்படும். பரிசளிக்கப்படும் தங்கம் பதக்கம் வடிவில் வழங்கப்படும்.

இது குறித்து சகாரா இந்தியா பரிவார் நிறுவன தலைவர் சுப்ரதா ராய் கூறியதாவது,

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவதன் மூலம் ஒவ்வொரு இந்திய வீரர்களும் நமது தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளனர். ஒரு விளையாட்டு வீரரால் இதை விட நாட்டிற்கு வேறெந்த வகையிலும் பெருமை சேர்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல இந்தியர்களை உற்சாகப்படுத்த இது ஒரு சிறிய அளவிலான பரிசு அறிவிப்பு ஆகும். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர் நாட்டின் ஒரு வெற்றி சின்னமாகவே கருதப்படுவார் என்றார்.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger