தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தி.மு.க. நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது. பிரபாகரன் உயிரோடு இருந்தபோது அவரை தி.மு.க. தலைவர் கருணாநிதி காப்பாற்றவில்லை. இன்று முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்.
எனது ரிஷிவந்தியம் தொகுதியில் கால்வாய் தூர்வாருவத ற்காக தமிழக அரசிடம் ரூ.14 கோடி கேட்டேன். ஆனால் தரவில்லை. சென்னையில் காலரா வாந்தி-பேதியால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். ஆனால் இதை மேயர் ஏற்க மறுக்கிறார்.
என்னை ஒரு பிரதான எதிர்க்கட்சி தலைவராக முதல்வரும், அமைச்சர்களும் மதிக்கவில்லை. எனவே மக்களை நேரில் சந்திக்க இருக்க� �றேன். ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை மக்களுக்காக மக்கள் பணி செய்வதற்கு ஒரு மாதம் தீவிர சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறேன்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்து இருக்கிறது. நெல்லையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சட்டம்-ஒழு ங்கு சீர்கெட்டு வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு மாதமாக கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அங்கிருந்து திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்வதாக அறிக்கை விடுகிறார். ஆனால் எந்த திட்டமும் செயல்பட்டதாக தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது எங்கள் விருப்பம். துணை ஜனாதிபதி தேர்தலையும் தே.மு.தி.க. புறக்கணிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு விஜயகாந்த் ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். நிகழ்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தலைமை நிலைய செயலாளர் ப ார்த்தசாரதி எம்.எல்.ஏ., இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment