News Update :
Powered by Blogger.

இன்றைய செய்திகள் (21-05-2012)

Penulis : karthik on Monday, 21 May 2012 | 18:13

Monday, 21 May 2012




ஜெயலலிதாவின் ஜனாதிபதி வேட்பாளரை சொந்த கட்சியே ஆதரிக்கவில்லை




























comments | | Read More...

ஜெயலலிதாவின் ஜனாதிபதி வேட்பாளரை சொந்த கட்சியே ஆதரிக்கவில்லை




சமாஜ்வாடி கட்சி  பி.ஏ. சங்மாவை அவரது சொந்த கட்சியே ஆதரிக்கவில்லை என்றும் அவரை குடியரசுத்தலைவர் பதவிக்கு வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என முல� ��யம் சிங் யாதவ் இன்று தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, மக்களவையின் முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 15.5.2012 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் குடியரசுத் தல� �வர் தேர்தலில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.  
 
இதையடுத்து, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை வகித்ததில்லை என்பதைக் கரு� ��்தில் கொண்டு, அவரை ஆதரிப்பதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.ஓடிசா மாநில முதல்வர்  நவீன் பட்நாயக்கும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
 
மேலும்  இவரை ஆதரிக்குமாறு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தமிழ� �� முதல்வர் ஜெயலலிதா 18.5.2012 அன்று வேண்டுகோள் விடுத்தார்.   சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஏ.பி. பரதன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சியின ் தலைவர் முலாயம் சிங் யாதவ், சிரோன்மணி அகாலிதள் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முதலமைச்சருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.  
 
அப்போது மக்களவை முன்னாள் தலைவரும், வடகிழக்கு � �ந்தியாவைச் சேர்ந்தவரும், ஜனாதிபதி ஆவதற்கு முழுமையான தகுதிகளை பெற்றவரும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான பி.ஏ. சங்மாவை நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

சித்தார்த், தனுசுடன் இணைத்து பேசுவதா?: ஸ்ருதிஹாசன் ஆவேசம்




சித்தார்த், தனுசுடன் ஸ்ருதி ஹாசனை � ��ணைத்து கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. சித்தார்த்தும் ஸ்ருதியும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டதாகவும், பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்தி வெளியானது. '3' படத்தில் நடித்தபோது தனுசுடன் இணைத்து வதந்தி பரவியது.

இதற்கு பதில் அளித்து ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

சித்தார்த், தனுசுடன் என்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவது முட்டாள் தனமானது. இருவருடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். எங்களுக்குள் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே உள் ளது. இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் அளிப்பது இல்லை.

எனது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது. எனக்கு எல்லாமே சினிமாதான். தனுஷ் திறமையான நடிகர். அவர் மனைவி இயக்கிய படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இசை ஆல்பம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அதுதான் எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger