சித்தார்த், தனுசுடன் ஸ்ருதி ஹாசனை � ��ணைத்து கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. சித்தார்த்தும் ஸ்ருதியும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டதாகவும், பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்தி வெளியானது. '3' படத்தில் நடித்தபோது தனுசுடன் இணைத்து வதந்தி பரவியது.
இதற்கு பதில் அளித்து ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-
சித்தார்த், தனுசுடன் என்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவது முட்டாள் தனமானது. இருவருடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். எங்களுக்குள் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே உள் ளது. இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் அளிப்பது இல்லை.
எனது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது. எனக்கு எல்லாமே சினிமாதான். தனுஷ் திறமையான நடிகர். அவர் மனைவி இயக்கிய படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இசை ஆல்பம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அதுதான் எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.
home
Home
Post a Comment