News Update :
Powered by Blogger.

தல கையால பிரியாணி சாப்பிட முடியலையே: பில்லா வி்ல்லன் வருத்தம்

Penulis : karthik on Monday, 14 May 2012 | 18:24

Monday, 14 May 2012




தல அஜீத் குமார் கையால பிரியாணி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பில்லா 2 படத்தில் நடிக்கும் இந்தி � ��டிகர் சுதான்ஷு பாண்டே தெரிவி்த்துள்ளார்.

சக்ரி டோலாட்டியின் பில்லா 2 படம் மூலம் தமிழிழுக்கு வரும் இந்தி வில்லன் சுதான்ஷு பாண்டே. அவர் தனது பில்லா 2 அனுபவங்களைப் பற்றி கூறுகையில்,

பில்லா 2 படத்தில் அப்பாஸி கேரக்டருக்கு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்தார் சக்ரி டோலாட்டி. இணையதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்த அவர் உடனே என்னை போனில் தொடர்பு கொண்டார். நாங்கள் சந்தித்தபோது நீதான்ய்யா அப்பாஸி என்றார்.

பில்லா 2ல் மது, மாதுவுடன் சொகுசு வாழ்க்கை வாழும் டான் நான். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய சாக்லேட், மில்க் ஷேக், காரமான உணவு வகைகள் சாப்பிட்டு எடையைக் கூட்டினேன். அஜீத் குமார் தான் ஒரு பெரிய ஸ்டார் போன்றே நடந்துகொள்ளமாட்டார். அவ்வளவு எளிமையானவர். அனைவருக்கும் உதவக்கூடியவர்.

தல கையால செய்யும் சுவையான பிரியாணி பற்றி பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை. எனக்கும், சென்னைக்கும் உள்ள ஒரே தொடர்பு பில� ��லா 2 தான். மேலும் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பில்லா 2 குழுவினருக்கு அஜீத் குமார் தன் கையாலேயே சமைத்து சுவையான பிரியாணி விருந்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.



comments | | Read More...

OK OK ராஜேஷுடன் காமெடியில் கலக்கப் போகிறார் விஜய்?




துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு,அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.

சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத ்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.  ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் � ��ூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..

முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.




comments | | Read More...

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக ஆதரவு?




புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவுக்கு திமுக ஆதரவு வழங்கும் என்று தெரிகிறது.

இந்தத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது. ஆனால், தா.பாண்டியனுக்கு மட்டுமே தெரிந்த காரணத்தால், அங்கு இந்திய கம்யூனிஸ்ட் போட்யிடவில்லை.

அதே நேரத்தில் இங்கு போட்டியிடப் போவது போல பாவ்லா காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது.

அதே போல திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் போட்டியிட மாட்டோம் என அறிவித்துவி� �்டன. ஆனால், அதிமுகவை எதிர்த்து நிற்பது என்று முடிவெடுத்து, களத்தில் குதிக்கவுள்ளது தேமுதிக.

அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். இவர் தனது பிரச்சாரத்தை தொடங்கி தொகுதியை சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளார்.

இந் நி்லையில் ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ள இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

முன்னதாக தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி, பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், கேட்கும் கட்சியை பொறுத்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தேமுதிக தலைவர் விஜய்காந்த் தானாகவே சென்று திமுகவின் ஆதரவு கேட்கத் தயங்குவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் திமுகவே முன் வந்து ஆதரித்தால், அதை வரவேற்று ஏற்றுக் கொள� ��ளத் தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேமுதிகவுக்கு ஆதரவைத் தெரிவித்துவிட்ட நிலையில், கிட்டத்தட்ட பொது வேட்பாளர் அந்தஸ்து தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. இதனால் அ ந்தக் கட்சியின் வேட்பாளரை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கூடவே காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் பெற விஜயகாந்த் தரப்பு முயற்சி எடுத்து வருகிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger