News Update :
Powered by Blogger.

கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை

Penulis : karthik on Friday, 30 December 2011 | 16:34

Friday, 30 December 2011

 
 
 
ஆந்திரா மாநிலம் கடப்பாவில் புகழ்பெற்ற தர்கா உள்ளது. மதசார்பின்றி அனைத்து பிரபலங்களும் இந்த தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கடப்பா தர்காவில் அடிக்கடி மலர் போர்வை போர்த்தி வழிபடுவது வழக்கம்.
 
இந்த தர்காவுக்கு நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் ஜோடியாக வந்தனர். இருவரும் மலர் போர்வை போர்த்தி பிரார்த்தனை செய்தனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதையொட்டி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



comments | | Read More...

இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?

 
 
 
 
 
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் '3'. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் கூறியதாவது: 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகம் முழுவதும் என்னை அறிய வைத்திருக்கிறது. இந்தப் பாடல் ஹிட்டானதை அடுத்து, நிறைய வாய்ப்புகள் வருகிறது. இந்தி உட்பட பிற மொழிகளிலிருந்தும் அழைப்பு வருவது உண்மைதான். ஆனால் எதுவும் முடிவாகவில்லை. சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம் என நினைக்கிறேன். '3' படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதனால் எனக்கு பொறுப்பு கூடியிருப்பதாக நினைக்கிறேன். இந்த எதிர்பார்ப்பை மற்றப் படங்களிலும் ஈடுசெய்வேன். இவ்வாறு அனிருத் கூறினார்.



comments | | Read More...

"தானே' புயல் கடும் சீற்றம் :ஓடுகள் பறந்தன ; மரங்கள் முறிந்தன; மின்சாரம் துண்டிப்பு

Penulis : karthik on Thursday, 29 December 2011 | 20:53

Thursday, 29 December 2011

வங்க கடலோரத்தில் மையம் கொண்டுள்ள "தானே' புயல் இன்று காலையில் கரையை கடந்து வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் போது கடும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை இருக்கும் என்பதால் கடலோர மாவட்ட பகுதி மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் தாக்கும் என்ற பகுதியில் வாழும் மக்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் பெரும் பாதிப்பை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள குறைவழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில், சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 107.526 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருக்கும், "தானே' புயல், படிப்படியாக நகர்ந்து, இன்று காலை, புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ., சூறைக்காற்றுடன் இன்று பலத்த மழை பெய்யும். கரையை கடக்கும் பகுதியில், மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே,
456.989 கடல் மைல் தூரத்தில், "தானே' புயலாக உருவெடுத்தது. இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களாக கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது.புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பலத்த காற்றை தொடர்ந்து நள்ளிரவு முதல் மழை, விட்டு விட்டு பெய்யத் துவங்கியது.நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என, முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது புதுச்சேரி அருகே இன்று காலை கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் புதுச்சேரி மற்றும் கடலூர், சென்னை நாகை , உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை யொட்டிய பகுதிகளில் குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் காற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. புயல் தாக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடல் கொந்தளிப்பு மட்டும் இருந்தது. பெருத்த சேதம் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும்இல்லை. மழை மட்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் ஒருவர் பலி: விழுப்பரம் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது; கடுமையான காற்றும் வீசி வருகிறது. சங்கராபுரத்தில் மரம் விழுந்து ஒருவர் பலியானார். வானூர்- மரக்காணம் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் சிலர் காயம் அடைந்தனர். இந்த பகுதியில் அதிகாரிகள் முகாம் இட்டுள்ளனர். கடும் காற்று காரணமாக மரங்கள், மொபைல் கோபுரங்கள் விழுந்து, கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger