News Update :
Powered by Blogger.

‌கொலைவெறி பாடல் உருவான விதம்! வெளிவராத சுவாரஸ்யமான தகவல்கள்!!

Penulis : karthik on Tuesday, 6 December 2011 | 09:16

Tuesday, 6 December 2011

 
 
தனுஷ் நடிப்பில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அவதரித்து இருக்கும் படம் 3. தனுஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில், சில வாரத்திற்கு முன்னர் இப்படத்தில் இருந்து சிங்கள் டிராக் ஆடியோவை ரிலீஸ் செய்தனர். வொய் திஸ் கொலைவெறி, கொலைவெறி... என ஆரம்பிக்கும் இப்பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் தனுஷே எழுதி பாடியிருக்கிறார்.
 
ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தபாடலை கேட்டு ரசித்துள்ளனர். மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட சிலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் இந்த பாடல் ரொம்பவே கவர்ந்துள்ளது. லட்சக்கணக்கான பேர் விரும்பி, ரசித்து பார்த்த கொலைவெறி பாடலுக்கு பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அது என்னவென்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே கூறியுள்ளார். இதோ...
 
21வயது நிரம்பிய அனிருத்தின் கனவு, ஏக்கம் எல்லாமே இசை தானாம். சென்னை லயோலா கல்லூரியில் இந்தாண்டு தான் பி.காம் முடித்துள்ளார். இந்த இளம்வயதில் எப்படி உங்களுக்குள் இசை, ஆர்வமும், ரசிகர்களின் ரசனையும் புரிந்தது என்று கேட்டால், சிறு வயது முதலே எனக்கு இசை ஆர்வம் அதிகம். சந்தியா என்ற டீச்சரிடம் வெஸ்டன் மியூசிக் கற்றுக்கொள்ள தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து பியானோ உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகளையும் கற்றுக்கொண்டேன். படித்து கொண்டு இருக்கும்போதே பல விளம்பர படங்களுக்கு இசை சேர்ப்பு செய்திருக்கிறேன். இது எனக்குள் உள்ள இசை ஆர்வத்தை மேலும் தூண்டியது.
 
சரி, ஐஸ்வர்யா தனுஷின் முதல்படமான 3 படத்தில் எப்படி உங்களுக்கு வாய்ப்பு வந்தது என்று கேட்டால், நான், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மூவருமே நன்கு அறிமுகமானவர்கள் தான். அவர்களுடன் நிறைய குறும்படங்களில் வேலை பார்த்துள்ளேன். அதன் அடிப்படையில் என்னை இந்தபடத்திற்கு இசையமைக்க தேர்வு செய்தனர். அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எங்க மூவரின் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஜாலியான மூடில் தான் எப்பவும் ‌ஒர்க் பண்ணுவோம் என்றவரிடம், கொலைவெறி பாட்டு எப்படி கம்போஸ் பண்ணினுங்கே, தனுஷ் எப்படி டியூன் கேட்டு பாடல் வரிகள் எழுதி பாடினார் என்று கேட்டதற்கு, சொன்னா நம்பமாட்டிங்க சும்மா மியூசிக் கம்போஸ் பண்ணிகிட்டு இருந்தேன். அப்போ தனுஷ் திடீர்னு மைக் முன்னாடி வந்து நின்று பாடல் வரி கூட எதுவும் எழுதாமல் மியூசிக் கேட்டு பாட ஆரம்பச்சுட்டாரு. எல்லாமே தனுஷ் போட்ட வரிகள் தான். அதில் தமிழ், ஆங்கிலம் மிக்ஸ் பண்ணி எழுதி, பாடி இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கும் இந்தபாட்டு ரொம்ப பிடிச்சுபோக இந்தபாட்டை உருவாக்கினோம். ஆனா அப்போ எங்களுக்கு தெரியாது. இந்தபாட்டு இவ்வளோ பெரிய ஹிட்டாகும் என்று. இளைஞர்கள் விரும்பி கேட்பாங்கனு நினைச்சோம். ஆனா எல்லா வயசுக்காறங்களும் இந்தபாட்டு ரசிக்கிறாங்க. தமிழ்நாட்டுல மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தபாடல் ஹிட்டாகியுள்ளது. இதனால் எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்கோம் என்றார்.
 
3 படத்தில் மொத்தம் 10 பாட்டு இருக்காம். அதில் ஒரு பாடல் ரீ-மிக்ஸ் பாடலாம். முதல்முறையாக தனுஷ், ஸ்ருதியுடன் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு பாடியிருக்கிறாரம். இதுதவிர கிளப் சாங்கை அனிருத்தும், மற்றொரு பாடலை முன்னணி பிரபல பாடகர்களும் பாடியிருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற இருவருக்கு இந்த படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்களாம். இளம் நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர்கள் என படம்முழுக்க மொத்தமும் சிறு வயது ஆட்‌களே.
 
முதல்படத்தின் பாடல்களே வெளிவராத நிலையில் படத்தில் உள்ள ஒரு பாடல் மட்டும் சூப்பர் ஹிட்டாகியிருப்பது அனிருத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரைத்தேடி பாலிவுட் அழைப்புகளும் வந்துள்ளன. பாலிவுட்டின் பெரிய சினிமா கம்பெனிகள் இரண்டு தங்களின் படத்திற்கு இசையமைக்க இவரை அணுகியுள்ளது. ஆனால் இப்போது 3 படத்தில் அனிருத் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.
 
கொலைவெறியின் வெற்றி, அனிருத்துக்கு உலக அளவில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!!



comments | | Read More...

ரஜினி தரப்பு ஆர்டர் கையை பிசையும் இயக்குனர்

 
 
 
'பெருமான்' என்றொரு படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இப்படத்தின் சப் டைட்டில் 'தி ரஜினிகாந்த்'. ஒரு ரஜினி ரசிகனின் கதை தானாம் இது. கதையை பற்றி செய்தி யாளர்கள் கேட்ட போது இந்த ஒரு விஷயத்தை தவிர அதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன் என்று அடம் பிடித்த படத்தின் டைரக்டர் ராஜேஷ் கன்னாவுக்கு ரஜினி தரப்பிலிருந்து வந்திருக்கும் ஒரு வேண்டுகோள், சரியான பிரம்படியாக இருந்திருக்கும். தலைப்பில் தன் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று கூறி விட்டார் ரஜினி. தனது ரசிகர் மன்ற தலைவரும், செய்தி தொடர்பாளருமான சுதாகர் மூலம் இத்தகவலை ராஜேஷ் கன்னாவுக்கு தெரிவித்திருக்கிறார் அவர்.
 
சுதாகர் கூறுகையில், "பெருமான் என்றால் அனைத்துக்கும் மேலான இறைவனைக் குறிக்கும். இறைவனை விட மேலானவர் ஒருவர் இல்லை என்பதை நம்புகிறவர் ரஜினி சார். இந்தத் தலைப்பை அனுமதித்தால் அது தவறான புரிதலுக்கு வழி வகுக்கும் என்பதால், நீக்கும்படி கேட்டுக் கொண்டார்" என்றார்.
 
இந்த கதைக்காக இரண்டு வருடங்கள் உழைத்த டைரக்டர் இப்படி ஒரு தலைப்பை வைக்க முடிவெடுத்த உடனேயே ரஜினியை நேரில் சந்தித்து தலைப்புக்கு அனுமதியும் வாங்கியிருந்தாராம். முதலில் தயங்கிய ரஜினி, முழு கதையையும் கேட்டவுடன் ஓ.கே என்று பச்சை கொடியும் காட்டினாராம். இனிமேல் மறுப்பதற்கு எதுவும் இல்லை என்ற டைரக்டரின் நம்பிக்கையில்தான் இப்படி ஒரு இடியை இறக்கியிருக்கிறார் ரஜினி.



comments | | Read More...

ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நிர்வாண நாயகி!

 
 
 
தன்னுடைய ஆபாசப் படத்தை வெளியிட்டு தனது புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று எப்எச்எம் இந்தியா இதழுக்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்தில் வீணா மாலிக்கின் முழு நீள நிர்வாணப் படம் இடம் பெற்றிருந்தது. இடதுபுற தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்ற பச்சை பெரிதாக தெரியும் வகையிலும், தனது இரு கைகளாலும், முன்னழகை மறைத்தபடியும் போஸ் கொடுத்திருந்தார் வீணா.
 
ஆனால் வழக்கம்போல நடிகைகள் மறுப்பது போலவே வீணாவும், நான் இப்படி ஒரு போஸே கொடுக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால் எப்எச்எம் இதழ் அதை மறுத்தது. வீணாதான் இப்படி போஸ் கொடுத்தார். மேலும் ஐஎஸ்ஐ என்ற எழுத்து நன்கு பெரிதாக தெரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த போசுக்காக அவருக்கு பெரும் தொகையும் கொடுத்துள்ளோம் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் எப்எச்எம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா. அதில், இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது. இதனால் எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டது. இந்த செயலானது இந்திய பீனல் கோட் சட்டத்தின்படியும், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இதற்காக ரூ. 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger