நிலநடுக்கத்திற்குப் பின் பாகிஸ்தான் அருகில் தோன்றியுள்ள 3 புதிய தீவுகள் Pakistan gets 3 new islands following earthquake
Tamil NewsYesterday, 05:30
புதுடெல்லி, செப். 27-
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலுசிஸ்தான் மாகாணத்தையே அந்த நிலநடுக்கம் புரட்டிப் போட்டது. இதன் தாக்கம் டெல்லி வரை உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அடங்கியபோது க்வாடர் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் வாழும் மக்கள் ஒரு புதிய தீவு ஒன்று கடற்பரப்பில் தோன்றியுள்ளதைப் பார்க்க நேர்ந்தது. இந்தப் புதிய தீவு 600 அடி விட்டமும் 30 அடி உயரமும் உள்ளது என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (டபிள்யூடபிள்யூஎப்) அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகரான முகமது மோசம் கான் தெரிவித்தார். கற்களும், மென்மையான மண்ணும் நிரம்பியுள்ள இந்தத் தீவின் மேற்பரப்பில் வாயு வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர பலுசிஸ்தான் கடற்பகுதியிலும் இரண்டு புதிய தீவுகள் தோன்றியுள்ளன. ஒமாரா நகரின் அருகேயுள்ள இந்தத் தீவுகள் சிறியவை என்றும், 30-40 அடி விட்டமும், 2-3 அடி உயரமும் கொண்டவை இவை என்றும் கான் தெரிவித்தார். இந்தத் தீவுகளில் இருந்தும் வாயு வெளிவந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இதுபோன்று தோன்றும் தீவுகளில் சில தீவுகள் அப்படியே நிலைத்து இருக்கும் என்றும் சில தீவுகள் காலப்போக்கில் மறைந்துவிடும் என்று கான் தெரிவித்தார். கடந்த 1945 ஆம் ஆண்டு அரை கி.மீ நீளத்தில் ஒன்றும், இரண்டு கி.மீ நீளத்தில் ஒன்றுமாக இரண்டு தீவுகள் தோன்றியதாகவும் அவர் கூறினார்.
...
Show commentsOpen link
Post a Comment