போலியான பிறப்புறுப்பில் சிறுநீரை நிரப்பி பரிசோதனைக்கு வழங்கிய ஓட்ட வீரர்
by Marikumar
விளையாட்டில் ஈடுபடுபவர்கள் போதை மருந்துகளை உபயோகித்துள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் சிறுநீர் பரிசோதனைக்காக போலி பிறப்புறுப்பொன்றில் நிரப்பப்பட்ட சிறுநீரை வழங்கிய இத்தாலிய நெடுந்தூர ஓட்ட வீரர் ஒருவர் ஒழுங்கீன நடத்தையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
டேவிஸ் லிக்சியார்டி (27 வயது) என்ற மேற்படி நபர், நிஜ பிறப்புறுப்பைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட போலி பிறப்புறுப்பில் குழந்தையொன்றின் சிறுநீரை நிரப்பி தனது சொந்த சிறுநீர் போன்று பரிசோதனையின் போது வழங்கி யுள்ளார்.
மேற்படி 10 கிலோமீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற இத்தாலிய விமானப்படைக் குழுவில் அங்கம் வகித்த டேவிஸின் ஏமாற்று நடவடிக்கையை அவரது அதிகாரிகள் கண்டறிந்ததையடுத்து அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
செயற்கை பிறப்புறுப்புடன் இணைக்கப்பட்ட விசேட பையில் சிறுநீரை நிரப்பி அதனை சிறிய கருவியின் மூலம் லேசாக வெப்பமூட்டி செயற்கை பிறப்புறுப்பினூடாக வெளியேற்றி புதிதாக சிறுநீர் கழிப்பதை போன்ற தோற்றப்பாட்டை அவர் ஏற்படுத்தியிருந்தார்.
Share |
Show commentsOpen link
Post a Comment