News Update :
Home » » கோயம்பேடு பஸ் நிலையத்தில் ருசிகர சம்பவம்: மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்தார் soldier came alive thought to have died of heart attack

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ருசிகர சம்பவம்: மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்தார் soldier came alive thought to have died of heart attack

Penulis : Tamil on Wednesday, 18 September 2013 | 18:31

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ருசிகர சம்பவம்: மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்தார் soldier came alive thought to have died of heart attack
Tamil NewsYesterday, 05:30

சென்னை, செப்.19-

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். பஸ் நிலையத்திலேயே சுருண்டு விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேனை வரவழைத்தனர்.

மாரடைப்பால் சுருண்டு விழுந்த வரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அந்த பயணி மரணம் அடைந்து விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலைய போலீசார், அவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார். மாரடைப்பில் பயணி சுருண்டு விழுந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது என்று கூறி அந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அந்த செல்போன் மாரடைப்பில் இறந்த பயணியின் செல்போனாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அந்த செல்போனை வைத்து, இறந்தவரை அடையாளம் காண முயற்சி மேற்கொண்டனர். அந்த செல்போனில் கடைசியாக 3 எண்களில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது.

அந்த 3 எண்களிலும் போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது 3 பெண்கள் போனை எடுத்து பேசினார்கள். அந்த செல்போனின் சொந்தகாரரின் பெயர் ஜெமினி, அவர் திருவண்ணாமலை மாவட்டம் சீலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

போலீசாரிடம் பேசிய 3 பெண்களும் ஜெமினியின் மனைவிகள் என்றும் கண்டறியப்பட்டது. ஜெமினி முன்னாள் ராணுவவீரர் என்றும் அவர் சென்னைக்கு வந்தார் என்றும், அவருடைய 3 மனைவிகளும் தெரிவித்தனர்.

மாரடைப்பில் இறந்தது ஜெமினி தான் என்று முடிவு செய்த போலீசார், உங்கள் கணவர் இறந்துவிட்டார் என்று அவர்களிடம் தெரிவித்தார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த 3 பெண்களும் தங்களது கணவர் ஜெமினி இறந்துவிட்டார் என்று கூறி கதறி அழுதபடி திருவண்ணாமலையிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கேட்டு, நெஞ்சில் அடித்து போட்டி போட்டு அழுதார்கள். போலீசார் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். பின்னர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு சென்று கணவரின் உடலை பார்க்கலாம் என்று அந்த 3 பெண்களும் புறப்பட்டனர்.

அந்த நேரத்தில் தான் அந்த இன்ப அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இறந்ததாக கருதப்பட்ட ஜெமினி, போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னுடைய செல்போன் தொலைந்துவிட்டதாகவும், அதை கண்டுபிடித்து தரும்படியாக மனுகொடுக்க வந்ததாக கூறினார். போலீஸ் நிலையத்தில் அவருடைய 3 மனைவிகளும் கண்ணீர் கோலத்தில் நிற்பதை பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

இறந்து போனதாக கருதிய தங்கள் கணவர் உயிரோடு வந்ததை பார்த்து 3 மனைவிகளும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்சிகளை பார்த்த போலீசாருக்கோ, நடந்த சம்பவம் கனவா? நனவா? என்று புரியவில்லை. என்றாலும் ஜெமினி உயிரோடு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. ஜெமினி சந்தோஷமாக தன்னுடைய மனைவிகளோடு போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

போலீசாருக்கு அடுத்த தலைவலி ஆரம்பமானது. பஸ் நிலையத்தில் மாரடைப்பில் இறந்தவர் யார்? என்று கண்டுபிடிக்கும் வேலையை தொடங்கிவிட்டனர்.
...
Show commentsOpen link

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger