பா.ஜனதாவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்: நரேந்திர மோடி பேச்சு Narendra Modi says BJP only can save the country
Tamil NewsYesterday,
ஆமதாபாத், செப்.15- பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான ஆட்சிமன்ற குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடந்தது. கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தை மூத்த தலைவரான அத்வானி புறக்கணித்தார். இந்த கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். கட்சியின் மூத்த தலைவர்களின் வாழ்த்துகளுக்கு இடையே, அத்வானியின் இல்லம் சென்று அவரது வாழ்த்தையும் நரேந்திரமோடி பெற்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் விமானம் மூலம் ஆமதாபாத் திரும்பினார். விமான நிலையத்தில் திரளான தலைவர்களும், தொண்டர்களும் திரண்டு வந்து மோடிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள், குஜராத் சிங்கம் வந்து விட்டது என்று மகிழ்ச்சியில் கோஷமிட்டனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, நரேந்திரமோடி அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் சாமானிய மக்களின் ஒரே நம்பிக்கை கீற்றாக பாரதீய ஜனதா கட்சி ஆகி உள்ளது. நம்பிக்கையற்ற நிலையில் உள்ள தேசத்தை பாரதீய ஜனதாவால் மட்டுமே காப்பாற்ற முடியும். இன்றைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்கிற ஆற்றல், பாரதீய ஜனதாவுக்கு இருக்கிறது என்று இந்த நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவொரு குந்தகமும் ஏற்படாது என்று உறுதிப்படுத்துகிற பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதே நிலைதான் 1989-90-ல் தொடங்கிய 10 ஆண்டுகளிலும் இருந்தது. அந்த நேரத்தில் வாஜ்பாய்க்கு மக்கள் பொறுப்பை வழங்கினர். பாரதீய ஜனதா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். 21-ம் நூற்றாண்டுக்காக கண்ட கனவை நனவாக்க முடியும் என மக்கள் நம்பிக்கை வளர்த்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த 10 ஆண்டுகளில் வாஜ்பாய் எடுத்த முயற்சி, உழைத்த உழைப்பு எல்லாம் வீணாக போய்விட்டது. அதுமட்டுமல்ல, மக்கள் நம்பிக்கை வைக்கிற துறை ஒன்று கூட இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு நாடு கீழான நிலைக்கு போய் விட்டது. நாட்டு மக்கள் தொகையில் 65 சதவீதம் பங்களிப்பு செய்கிற இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்ன ஆகும்? எப்படி ஒருவர் தனது எதிர்காலத்துடன் விளையாட முடியும்? நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தலித்துகள், ஆதிவாசி மக்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோரை மீட்டெடுக்க வேண்டிய மொத்த பொறுப்பு, பாரதீய ஜனதாவுக்கு உள்ளது. நமது இயக்கம் அமைப்பு ரீதியிலானது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நமது கட்சி ஒன்றுபட்ட உணர்வுடன் இயங்குகிற கட்சி. இந்த ஒன்றுபட்ட உணர்வு நமது பலம். இந்திய மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பாரதீய ஜனதா பூர்த்தி செய்யும். இவ்வாறு நரேந்திரமோடி கூறினார். ...
Show commentsOpen link
Post a Comment