"ஆண்ட்ரியா கூட எந்த 'லிங்க்'கும் இல்லை" : அனிருத் அலறல்
by News Admin
Sound Camera Action | Tamil Cinema Latest News | Movie Reviews ...Today,
'முத்த' சர்ச்சையில் சிக்கி அதனால் பிரிந்தனர் ஆண்ட்ரியாவும்-அனிருத்தும். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு ஆண்ட்ரியாவும் – அனிருத்தும் மீண்டும் இணைந்து விட்டார்கள். இனி அனிருத் இசையமைக்கும் எல்லாப்படங்களிலும் ஆண்ட்ரியா பாடுவார் என்றெல்லாம் செய்திகள் கிளம்பின.
ஆனால் அதை தற்போது மறுத்திருக்கிறார் அனிருத்.
'வணக்கம் சென்னை' படத்துக்கு நான் இசையமைக்கிறேன். அந்தப்படத்தில் ஆண்ட்ரியா எங்கடி பொறந்த எங்கடி பொறந்த என்ற பாடலை ஆண்ட்ரியா தான் பாடினார். எல்லோரும் அதை வைத்துக்கொண்டி நானும், ஆண்ட்ரியாவும் மீண்டும் இணைந்து விட்டதாக கிளப்பி விட்டுள்ளனர்.
இந்தபாடலின் ஒரு பகுதியை ரெக்கார்டிங் செய்வதற்காக நான் மும்பையில் இருந்தேன். ஆனால் ஆண்ட்ரியா இந்தப்பாடலின் மற்றொரு பகுதியை சென்னையில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் எனது உதவியாளார் தான் அவருடன் இருந்து பணியாற்றினார். ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை, இனி பணியாற்றப்போவதுமில்லை"
இவ்வாறு அனிருத் அலறியிருக்கிறார்.
47 total views, 47 views today
The post "ஆண்ட்ரியா கூட எந்த 'லிங்க்'கும் இல்லை" : அனிருத் அலறல் appeared first on Sound Camera Action.
Show commentsOpen link
Post a Comment