போலி பாஸ்போர்ட்டில் சவூதி அரேபியா சென்ற நாகர்கோவில் வாலிபர் கைது fake passport Saudi Arabia Nagercoil youth arrest
Tamil NewsToday, 05:30
அவனியாபுரம், செப். 26–
நாகர்கோவிலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சுயம்பு (வயது35). இவர் போலி பாஸ்போர்ட் எடுத்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது சுயம்பு போலி பாஸ்போர்ட் எடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பினர்.
இன்று காலை விமானத்தில் சுயம்பு மதுரை வந்தார். போலி பாஸ்போர்ட் மூலம் சவூதி அரேபியா சென்ற அவரை அதிகாரிகள் பிடித்து பெருங்குடி போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனி, சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுயம்புவை கைது செய்தனர்.
...
Show commentsOpen link
Post a Comment