கோலிவுட்டில் வலம் வரும் நஸ்ரியா ஜெய் காதல் கிசு கிசுக்கள்!
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
ஜெய்-நஸ்ரியா காதலிப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சிம்பு, ஹன்சிகாவை தொடர்ந்து ஜெய்-நஸ்ரியா புதிய காதல் ஜோடிகளாக உலா வருவதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. 'திருமணம் என்னும் நிக்ஹா' என்ற படத்தில் ஜெய்-நஸ்ரியா ஜோடியாக நடித்து வருகின்றனர்.
அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அது காதலாக மலர்ந்திருப்பதாக யூனிட்டில் உள்ளவர்கள் முணுமுணுக்கின்றனர். நஸ்ரியாவும், ஜெய்யும் எந்நேரமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிய வண்ணம் இருக்கின்றனர். ஷூட்டிங் முடிந்தபிறகும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகிறார்களாம்.
ஏற்கனவே 'ராஜா ராணி' படத்தில் இணைந்து நடித்தாலும் இவர்கள் இருவருக்கும் பொது நண்பர் மூலம் நட்பு மலர்ந்தது. அன்று முதலே நஸ்ரியா மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்ட ஜெய், 'எந்த ஹீரோவுடனும் நெருக்கமான காட்சிகளில் நடிக்காதிங்க' என்று தடை விதித்திருப்பதாக கோலிவுட் பச்சி கிசுகிசுக்கிறது.
இது இயக்குனர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சமீபத்தில் டாப் ஹீரோ ஒருவருடன் முதலிரவு காட்சியில் நடிக்க கேட்டபோது நஸ்ரியா மறுத்ததுடன் ஷூட்டிங்கிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறிவிட்டாராம்.
பிறகு அவரை யூனிட்டில் உள்ளவர்கள் தொடர்புகொண்டபோது, 'நெருக்கமான காட்சிகளில் நடிக்க வற்புறுத்தமாட்டோம் என்று எழுதி தந்தால்தான் வருவேன்' என தெரிவித்தாராம். நஸ்ரியா-ஜெய் நெருக்கம் பற்றித்தான் இப்போது கோலிவுட் ஹாட் பேச்சாக உள்ளது.
Show commentsOpen link
Post a Comment