News Update :
Home » » 16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலை Jagan Mohan Reddy freed on bail

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலை Jagan Mohan Reddy freed on bail

Penulis : Tamil on Monday, 23 September 2013 | 06:22

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலை Jagan Mohan Reddy freed on bail
Tamil NewsToday, 05:30

ஐதராபாத், செப். 23-

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சிலருக்கு எதிராக 10 குற்றப்பத்திரிக்கைகள் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதில் 5 வழக்குகள் இந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டவையாகும்.

முன்பு ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சராக இருந்தபோது, ஆட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி ஜெகன் மோகனின் கம்பெனி மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர் முதலீடுகள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

ஜெகன் மோகன் ரெட்டியின் மீதான குற்றப்பத்திரிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின் அவர் ஜாமின் கோரி விண்ணபிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்நிலையில் குற்றப்பத்திரிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமின் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, 2 லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீனில் ஜாமின் வழங்குவதாக தீர்ப்பளித்தார். மேலும், அவர் ஐதராபாத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இதனால், ஐதராபாத் சஞ்சல்குடா சிறையில் 16 மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலையானர். 
...
Show commentsOpen link

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger