News Update :
Home » » சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை

சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை

Penulis : karthik on Wednesday 19 September 2012 | 22:14

சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை
சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை

பெய்ஜிங், செப்.20-

ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் இந்த நாடுகளுக்கு இடையே நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1931-ம் ஆண்டு ஜப்பான் ஆக்கிரமிப்பை நினைவுகூறும் நாளை சீனா கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தது.

இதுதொடர்பாக சீன நகரங்களில் ஜப்பானுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. இதே போன்று கடல் பகுதியில் சீன படகுகளும், ஜப்பான் படகுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. கிழக்கு சீன கடல் தீவு பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்றன. சீனாவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பதிலடி தருகிற வகையிலும் சீன நகரங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஜப்பான் வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.

ஜப்பான் எதிர்ப்பு போராட்டம் வலுத்துவிடுமோ என்ற எண்ணத்தில் ஜப்பான் நிறுவனங்கள் தங்களது பல தொழிலாளர்களை ஜப்பானுக்கு திருப்பி அனுப்பியது. இதற்கிடையே பெய்ஜிங்கில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் முன்பாக போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, தூதரகத்தின் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். அவர்கள் சீனக்கொடிகளை அசைத்தவாறு, ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக கோஷங்களை முழங்கினர� ��.

இந்த போராட்டம் மீண்டும் நடக்காதவாறும், கலவரங்களைத் தடுக்கும் விதத்திலும் சீனா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜப்பான் தூதரகத்தின் முன்பாக சீன கலவர தடுப்பு போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பற்றி சீனா சென்றுள்ள அமெரிக்க ராணுவ மந்திரி லியோன் பானட்டா கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பெரிய மோதல்களாக, கலவரங்களாக வெடிக்கும் ஆபத்து உள்ளது. இதில் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது, சீனா தான் அனுபவித்த வேதனைகளை நினைத்துப்பார்க்கிறது. அதே நேரத்தில் நாம் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு வாழ்ந்து விட முடியாது என்றார்.  
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger