News Update :
Home » » கோபப்படுவது என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு

கோபப்படுவது என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு

Penulis : karthik on Thursday 2 August 2012 | 23:18






கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல் என்று தேனியில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசின ார்.

தேனியில் தே.மு.தி.க., சார்பில், வறுமை ஒழிப்பு தின விழா நடந்தது. நாட்டுப்புற கி ராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். நாங்கள் தொண்டர்களின் சொந்த பணத்தில் உதவிகள் செய்கிறோம். ஏழை மக்கள் வறுமையில் வாடும் போது, கொடநாட்டில் முதல்வர் ஓய்வெடுக்கிறார். வெறும் அறிக்கையில் ஆட்சி நடத்துகிறார்கள்.



கேரள மருத்துவ கழிவுகளை, குமுளியிலும்,பொள்ளாச்சியிலும் கொட்டுகின்றனர். இத� � கேட்க ஆள் கிடையாது. நான் ஆட்சிக்கு வந்தால் போலீசார் லஞ்சம் வாங்க முடியாது. படித்த போலீஸ் அதிகாரிகள், பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

முல்லை பெரியாறு அணை பிரச்னை தீர்க்கப்படாததால், 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக முதன்முதலில் போராடியவன் நான். தண்ணீர் கொள்ளை, கனிம வளம் கொள்ளை, எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம். விலைவாசி உயர்ந்துள்ளது.


ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளனர். இதில் ஒரு லட்சம் பேருக்காது வேலை கொடுக்க முடியுமா. விஜயகாந்த் கோபப்படுகிறான், என்று சொல்கிறார்கள். கோபப� ��படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்.



விஜயகாந்த் எதற்கும் பயப்பட மாட்டான். எதிர்த்து பேசினால் என்ன செய்வீர்கள். சிறை செல்லவும் தயார். வருகிற எம்.பி., தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும். நில அபகரி� ��்பு என்று கைது செய்கிறீர்கள். நாளை இந்த சட்டம் உங்களுக்கும் திரும்பும். இதற்காக 2016 வரை காத்திருக்க வேண்டாம். 2014 ல் நாம் தனியாக ஆட்சியை பிடிப்போம். 16 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு குறித்து கலெக்டர் சகாயத்தின் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன. இவ்வாறு பேசினார்.











Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger