அஜீத்தை 'க� �ங் ஆஃப் ஓபனிங்' என்பார்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள். காரணம் அவரது படம் வெளியான முதல் வாரம் எந்த ஒரு திரையரங்கிலும் டிக்கெட் கிடைப்பது அரிது.
விநியோகஸ்தர்கள் முதல் வாரத்தில் கடகடவென கல்லாவை கட்டி விடுவார்கள் . 'பில்லா 2' விலும் நல்லா கட்டலாம் கல்லா என நினைத்த விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் இரண்டாம் நாள் முதலே பட வசூல் குறைய ஆரம்பித்தது. பார்வையாளர் மிகவும் குறைய ஆரம்பித்ததால், இப்போது பல தமிழக திரையரங்குகளில் 'நான் ஈ' கொடி கட்டி பறக்கிறது.
இப்போது 'பில்லா 2' படத்தின் வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக � �ெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாய் கூட பில்லா 2 வசூல் செய்யவில்லை.
பிரிட்டனில் 'பில்லா 2' முதல்வாரம் ஈட்டிய தொகை ரூ 61.20 லட்சம். பிரிட்டன் மற்றும் அய ர்லாந்தில் 20 திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
அமெரிக்காவில் மிகவும் பிரம்மாண்டமாக 31 திரையரங்குகளில் இப்படத்தை வெளியி்ட்டனர். அங்கு முதல்வாரம் மொத்தம் 64 லட்சத்தை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.
மூன்று வாரங்களில் அமெரிக்காவில் 90 லட்சம், பிரிட்டனில் 79 லட்சம் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. இத்தகவல்களை, பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தருக்கு 'பில்லா 2' பெரும் நஷ்டத்தை ஏற்ப டுத்தி இருக்கிறது.
home
Home
Post a Comment