சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி. இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசுராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிகமாக அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் முடிச்சூர் சாலையில் வந்தபோது பஸ ் லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந்த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சலிட்டனர். சிறுமி கீழே விழுந்து இறந்ததையறிந்த டிரைவர் சிறிது தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பேருந்தில் இருந்த மற்ற மாணவிகள் கீழே இறங்க தொடர்ந்து கூச்சலிட, அங்கு ஏராளமானோர் திரண்டனர். விபத்தில் மாணவி இறந்ததை அறிந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கினர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள் பஸ்சுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
home
Home
Post a Comment