அமெரிக்கா அரசாங்கம் அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை ஆண்டு தோறும் தேர்வு செய்து ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்கிறத ு. அதன்படி இந்த ஆண்டு விருது பெறும் 96 விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார்.
இந்த விருது பெறுவோர் பட்டியலில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ஸ்ரீதேவி வ� ��துலசர்மா, பவான் சின்கா, பராக் ஏ.பதக், பிஜு பாரிக்கதான் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். ஸ்ரீதேவி விதுலசர்மா, பவான் சின்கா ஆகியோர் துணை பேராசிரியராக இருக்கிறார்கள். பராக் ஏ.பதக் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலும், பிஜு பாரிக்கதான் ஹார்வார்டு மருத்துவ கல்லூரியிலும் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள்.
Post a Comment