நடிகை அமலாபால் அமெரிக்காவில் இரண்டு வாரம் இடங்களை சுற்றி பார்த்துவிட்டு திரும்பியுள்ளார். முன்பைவிட இப்போது பொலிவு அவரிடம் தெரிகிறது.
சமீபத்தில் ரிலீசான வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி படங்கள் ஹிட்டாகி அமலாபால் மார்க்கெட்டை உயர்த்தி உள்ளது. அடுத்து ஜெயம் ரவியை வைத்து சமுத்திரக்கனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் கூறியதாவது:-
வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்க பேரவையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். குடும்பத்தினருடன் இடங்களை சுற்றி பார்த்தேன். உறவினர் வீடுகளுக்கும் சென்றேன்.
புது மேக்கப்பில் எனது தோற்றத்தையும் மாற்றியுள்ளேன். சிகை அலங்கார நிபுணரிடம் சென்று எனது கூந்தலை அழகுபடுத்தியுள்ளேன்.
இவ்வாறு அமலாபால கூறினார்.
Post a Comment