பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கச்சத்தீவையொட் டிய இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் நேற்று இரவு கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் என்று எச்சரித்த சிங்கள கடற்படையினர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்குடன் அங்கிருந்து புறப்பட்ட போது, அவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் படகுகளில் இருந்து மீன்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சிங்களப்படையினரின் இந்த தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மீனவர்கள் மீதான சிங்களப்படையினரின் தாக்குதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இதற்காக இலங்கை அரசை இந்தியா ஒருமுறை கூட கண்டிக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்தா விட்டால், தமிழக காவல் துறையை நிறுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்ததை போன்று, தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க துப்பாக்கி ஏந்திய தமிழக கடலோர பாதுகாப்பு படை கா� �லர்களை அனுப்புவோம் அல்லது மீனவர்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு பயிற்சி அளித்து துப்பாக்கி வழங்குவோம் என்று மத்திய அரசை தமிழக முதல்வர் எச்சரிக்க வேண்டும். அதன்பிறகும் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மீனவர்களின் பாதுகாப்புக்காக மேற்கூறிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment