ராஜபக்சேதான் எந்தவித சர்வதேச நெருக்கடி வந்தாலும் அதற்குப் பயப்படாதீர்கள். தொடர்ந்து தாக்குதல் நடத்தி தமிழர் களைக் கொன்று குவியுங்கள் என்று உத்தரவிட்டார். அவரது ஊக்குவிப்பால்தான் எங்களால் தமிழர்களைக் கொல்ல முடிந்தது என்று பச்சையாகவே பேசி சிங்களத்தின் இன அழிப்பை உறுதி செய்துள்ளார் இலங்கை ராணுவ தளபதியான ஜெகத் ஜெயசூரியா.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்ற மிகச் சிறிய பகுதிக்குள் சிக்கிக் கொண்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொத்து வெடிகுண்டுகளை வீசிக் கொடூரமாகக் கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விடாமல் நடத்துமாறும், தமிழர்களைக் கொல்லுமாறும் ராஜபக்சேதான் உத்தரவிட்டதாக இலங்கை ராணுவ தளபதி ஜெயசூர்யா பகிரங்கமாகவே கூற ியுள்ளார்.
குருநாகல் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயசூரியா கொக்கரித்துப் பேசியதாவது...
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையின் வடக்குப்பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடு� �ளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா? வேண்டாமா? என்று தோன்றியது.
ஏனென்றால் அந்த பகுதியில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள் என்று நினைத்தோம். மேலும் இறுதிக்கட்ட போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.
இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும், சர்வதேச மிரட்டல்களுக்கு அடி பணியாமல் தொடர்ந்து திட ்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசியில் உத்தரவிட்டார். அவர் கொடுத்த தைரியத்தில்தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.
மேலும் போர்க்காலத்தில் அவர்தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிக்கட்டப் போரில் வென்றிருக்க முடியாது. இறுதிக்கட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்று பேசியுள்ளார்.
ராஜபக்சே மனிதாபிமானம் இன்றி நடந்தார், தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொல்ல உத்தரவிட்டார், ஊக்குவிப்பு செய்தார் என்று பச்சையாக, பகிரங்கமாக கூறியுள்ளார் ஜெயசூர்யா.
இருந்தாலும் இதுகுறித்தும் சர்வதேச சமுதாயம் எதையும் கண்டுகொள்ளாது என்றே தோன்றுகிறது.
Post a Comment