இந்தியாவில் டிஎன்எஸ் சேஞ்சர் வைரஸ் பாதித்த ஆயிரக்கணக்கான கம்ப்யூ ட்டர்களில், இன்று முதல் இன்டர்நெட் பார்ப்பதில் தடை ஏற்படலாம் என இணையதள பாதுகாப்பு நிறுவனம் மெக்அபி தெரிவித்துள்ளது. டிஎன்எஸ் சேஞ்சர் வைரஸ் என்பது மால்வேர் என அழைக்கப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் புரோக்ராம். இந்த புரோக்ராம், ப� ��ரும்பாலும் ஆபாச வெப்சைட்கள் மூலமாகத்தான் பரப்பப்படுகின்றன. இந்த சாப்ட்வேரை
பயன்படுத்தினால்தான் வீடியோ காட்சிகளை பார்க்க முடியும் என தெரிவிக்கப்படும். இதை இன்ஸ்டால் செய்யும்போது, நமது கம்ப்யூட்டர்களின் டிஎன்எஸ் (டொமைன் நேம் சிஸ்டம்) மாற்றியமைக்கப்படுகிறது.
இதன்பின், நாம் ஒரு வெப்சைட் முகவரியை டைப் செய்தால், அது மற்ற போலி வெப்சைட்டுக� �ுக்கு செல்லும். இதனால் நாம் விரும்பும் வெப்சைட்களை பார்க்க முடியாது. முறைகேடான வழியில் விளம்பர வருவாயை தேடி கொள்வதற்காக இதுபோன்ற மால்வேர்களை சில நிறுவனங்கள் உருவாக்கி இன்டர்நெட் மூலமாக பரப்புகின்றன. இதன்மூலம், அந்த நிறுவனத்தின் விளம்பரதாரர் வெட்சைட்களை மட்டுமே நாம் பார்� ��்க முடியும். ஈஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த ரோவ் டிஜிட்டல் என்ற நிறுவனம், இது போன்ற டிஎன்எஸ் சேஞ்சர் வைரஸை முன்பு பரப்பி 14 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது.
டி.என்.எஸ் சேஞ்சர் வைரஸ் சம்பந்தப்பட்ட சர்வர்களை அமெரிக்காவின் எப்.பி.ஐ இன்று மூடுகிறது. இதனால், வைரஸ் பாதிக்கும் கம்ப்யூட்டர்களில் இன்று முதல் இன்டர்நெட் பார்ப்பதில� �� தடை ஏற்படும் என இணையதள பாதுகாப்பு நிறுவனம் மெக்அபியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் 3 லட்சம் கம்ப்யூட்டர்களில் டி.என்.எஸ் சேஞ்சர் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 50 ஆயிரம் கம்ப்யூட்டர்களில் டிஎன்எஸ் சேஞ்சர் வைரஸ் பாதிப்பு உள்ளதாக 'இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இவற்றில் பாதி கம்ப்யூட்டர்களில் வைரஸ் பாதிப்பு நீக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள கம்ப்யூட்டர்களை கண்டறியும் பணியில் அந்த குழு ஈடுபட்டுள்ளது. அந்த கம்ப்யூட்டர்களில் மட்டும் இன்டர்நெட் பார்ப்பதில் இன்று முதல் தடை ஏற்படலாம்.
Post a Comment