லண்டனில் மகாத்மா காந்தி இருந்தபோது எழுதிய கடிதங்கள் மற்றும் பயன்படுத்திய பொருட்களை வாங்க உலகின் பெரிய ஏல மையமான சொத்பியுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானதால் வரும் ஜூலை 10-ம் தேதி நடக்கவிருந்த இந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களின் ஏலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சேமிப்பில், மகாத்மா காந்தியின் ஆயிரக்கணக்கான கடிதங்கள் மற்றும் ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் அங்குள்ள புகைப்படங்கள் காந்திஜியின் நண்பரான ஹெர்மான் கல்லேன்பச் என்பவருடன் உள்ள முரண்பாடான உறவுகள் குறித்து காட்டுவதாக இருக்கிறது. இது வரலாறு குறித்து ஆராயும் ஆய்வாளர்களுக்கு முக்கிய ஆவணங்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகி� ��து.
மத்திய கலாச்சார துறையை சேர்ந்த நிபுணர்கள் அங்கு சென்று நடத்திய ஆய்வில் இந்த தொகுப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய அறிய அற்புத பொக்கிசங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த ஆவணங்கள் 500000 பவுண்ட்களிலிருந்து 700000 பவுண்டுகள் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதை இந்திய அரசு வாங்கியுள்ளது என்ற செய்தி உறுதி செய்யப்படமுடியவில்லை.
காந்தி மற்றும் அவரது நண்பர் ஹெர்மான் கல்லேன்பச் இருவரிடையே உள்ள உறவை பற்றி இது முழுமையாக அறிய உதவுவதோடு காந்தியின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி அறிய அடிப்படையாக அமையும் என்றும் ஏல மையத்தினர் சொல்கிறார்கள்.
கடிதங்களை பொறுத்தவரை, மகாத்மா காந்தியின் முதலாவது மகன் ஹரிலால் எழுதிய உருக்கமான கடிதங்களும், ஹெர்மான் கல்லேன்பச் மற்றும் காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் உடனான நெருக்கமான நட்பு குறித்த கடிதங்களும் அடங்கும்.
மேலும் காந்தியின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் கடிதங்களும் இதில் அடங்கும். இங்குள்ள பதிவுகள் அனைத்தும் காந்தியின் வாழ்க்கையையும் மற்றும் அவரது உள்வட்ட நண்பர்களைப பற்றியும் அறிய உதவும் என்று ஏல மையத்தினர் தெரிவித்தனர்.
Post a Comment