News Update :
Home » » மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழக்கு: அன்புமணிக்கு `பிடிவாரண்டு' சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு

மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழக்கு: அன்புமணிக்கு `பிடிவாரண்டு' சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு

Penulis : karthik on Saturday, 7 July 2012 | 21:04

மத்திய சுகாதார துறை முன்னாள் மந்திரி அன்புமணி. இவர் மீது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தகுதியற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து அனுமதி அளித் ததாக  சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கில் அன்புமணி, தற்போது மத்திய அமைச்சரவை செயலகத்தில் துணை செயலாளராக இருக்கும் கே.வி.எஸ்.ராவ் (அன்புமணி பதவியில் இருந்த போது மத்திய சுகாதார துறை துணை செயலாளராக இருந்தார்), சுகாதார அமைச் சகத்தின் பிரிவு அலுவலர் சுதர்ஷனகுமார், சப்தர் ஜிங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ்.தூபியா, திபேந்திரகுமார், இந்தூர் இன்டெக்கில் மர ுத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதோ ரியா, கல்லூரியின் முன்னாள் டீன் டோங்கியா, மருத்துவ கல்லூரி இயக்குனர் சக்சேனா, நிதின் கோத்வால், டாக்டர் பவன் பம்பானி ஆகியோருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 27-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

கே.வ� �.எஸ்.ராவ் அரசு உயர் பொறுப்பில் உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கடந்த மே  மாதம் 16-ந்தேதி கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அனுமதி அளித்து சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி தலவந்த்சிங் இந்த வழக்கு விசாரணையை ஜுலை 7-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார். 

குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட அனைவரும் இன்று நடைபெறும் விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று அன்புமணி உள்பட 10 பேருக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அன்புமணி கோர்ட்டில் ஆஜராகவில்லை. 

இதைத் தொடர்ந்து நீதிபதி தலவந்த்சிங் அன்புமணிக்கு ஜாமீனில் வெளியே வரக் கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அதோடு வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger