இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மீண்டும் நீண்ட முடி வளர்க்க முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி.
மிக நீண்ட கூந்தலுடன், விக்கெட் கீப்பராக அறிமுகமான தோனி, கேப்டன் பதவியை பெற்றதும் முடியை குறைத்துக்கொண்டார்.
கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற அன்றே, மொட்டையடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இன்று கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தான் மீண்டும் நீண்ட கூந்தல் வளர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து பழைய தோனியை மீண்டும் பார்க்கலாம் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
Post a Comment