பத்து முட்டாள்கள் சேர்ந்து ஒரு படத்தை தோல்யடைய வைத்துவிடலாம், ஆனால் ஒரு படைப்பாளியின் பயணத்தைத் தடுத்துவிட முடியாது, என்கிறார் இயக்குநர் கவுதம் மேனன்.
ஏன் இத்தனை கோபம்?
எல்லாம் விண்ணைத்தாண்டி வருவாயா இந்தியில் சரியாகப் போகாததுதான். ஏஆர் ரஹ்மான் இசையில் ஏக் தீவானா தா என்ற பெயரில், வெளியான இந்தப் படம், பெரிய வரவேற்பைப் பெறவில்லை. கடுமையான விமர்சனங்கள் வேறு.
இதுகுறித்து தனது டிவிட்டர் இணையத்தில் "விமர்சகர்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். எப்போதுமே என் படங்களுக்கு நல்லபடியான விமர்சனங்கள் வந்ததில்லை" என்று கூறியிருந்தார் கவுதம்.
ஆனால் அப்படியும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் ஓயவில்லை. இதனால் கடுப்பான கவுதம் மேனன், "பத்து முட்டாள்கள் சேர்ந்து ஒரு படத்தின் வெற்றியைத் தடுத்துவிடலாம். ஆனால் ஒரு படைப்பாளியின் பயணத்தை தடுத்துவிட முடியாது.. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.. " என்று கூறியுள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவர இருக்கிறது. இளையராஜா இசையமைக்கிறார்.
விடுங்க கவுதம்... ஏக் தீவா தா தோல்வியை இந்த வசந்தம் ஈடுகட்டிவிடும்!
Post a Comment