நான் கடவுள் படத்தில் கண்ணில்லாத பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் கண்ணீரை விருதாகப் பெற்ற பூஜா, பாலாவின் எரியும் தணல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
திடீரென பாலாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று நமக்கு ஆச்சரியம் மேலிட்டது. அதனை எவ்வாறு தீர்ப்பது... ஒரே வழிதான் நேரடியாக பூஜாவைக் கேட்டுவிடலாமே என்று அவரை தொலைபேசியில் அழைத்தோம்.
அப்போது,
நான் தற்போது சென்னையில்தான் தங்கியுள்ளேன். பாலா சாரைப் பார்த்து இந்தப் படம் குறித்து பேசினோம், கதை சொன்னார், மிகவும் மிடித்துப்போய்விட்டது. தற்போது ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்திருக்கிறோம்.
பாலா சாருடன் இன்னொரு படம் நடிக்கப் போகிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறியுள்ள பூஜா, படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி கூறுங்களேன் என்று கேட்டதற்கு மௌனத்தையே பதிலாக அளித்தார்.
இந்த நீண்ட இடைவெளி ஏன் என்று கேட்டதற்கு, நான் கடவுள் படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். அதில் நடித்ததைப் பார்த்து என் தந்தை, உன் திரையுலகில் ஒரு லட்சியத்தை நீ அடைந்துவிட்டாய். இனி வாழ்க்கையில் செட்டிலாக வேண்டிய வேலையை பார்க்கலாம் என்று கூறி இலங்கைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவரது வார்த்தையை தட்ட முடியாமல், பல நல்ல வாய்ப்புகளை நான் மறுக்க வேண்டியதாகிவிட்டது.
ஆனால், பாலா சாருக்கு என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. அவரது அழைப்பு வந்ததுமே ஓகே சொல்லிவிட்டேன் என்கிறார் கண்களில் மகிழ்ச்சியுடன்.
Post a Comment