News Update :
Home » » காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்லிகா ஷெராவத்

காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்லிகா ஷெராவத்

Penulis : karthik on Sunday, 22 January 2012 | 09:00

பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் ஆலிவுட்டில் பிரபலமானதை அடுத்து லாஸ்
ஏஞ்சல்ஸ் நகரில் நிரந்தரமாக தங்கிவிட்டார். தற்போது 2 இந்தி படங்களில்
நடிக்க மும்பை வந்துள்ளார். இருபடங்களிலும் ஹீரோ விவேக் ஒபராய்.
மும்பையில் மல்லிகா ஷெராவத் அளித்த பேட்டி வருமாறு:-
லாஸ்ஏஞ்சல்ஸ்சில் இருந்தாலும் மும்பையில் உள்ள எனது வீட்டில் இருப்பது
போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. இங்கு என்னைப்பற்றி நிறைய வதந்திகள் உலா
வருகின்றன. நான் இப்போது நடித்து வரும் படங்கள் அவற்றுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் தேவையில்லாத கற்பனைகளையும் தகர்த்து எறியும்.
மும்பை பட உலகில் நேர்மையை எதிர்பார்ப்பது கடினம். ஆலிவுட்டில் ,
சொந்தக்காரர்கள் என்பதற்காக தகுதி இல்லாதவர்களுக்கு ஒரு போதும் வாய்ப்பு
அளிக்கப்படுவதில்லை.
ஆலிவுட்டில் உள்ளவர்கள் என்னை அன்புடன் வரவேற்று மரியாதையுடன்
நடத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை அனைத்து விஷயங்களும் சுதந்திரமாக
நடைபெற வேண்டும். இங்கு பெண்களுக்கு , அதிகளவில் வாய்ப்புகள்
கிடைப்பதில்லை. சுதந்திரமும் அளிக்கப்படுவதில்லை. ஆனால் அமெரிக்காவில்
பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்படுகிறது. ஒரு முறை அதிபர் ஒபாமாவை
சந்தித்த போது , அமெரிக்காவில் சுதந்திர உணர்வுக்கு
மதிப்பளிக்கப்படுவதாகவும் சுதந்திர உணர்வு மீது தான் அமெரிக்கா
கட்டப்பட்டுள்ளது.
நீங்களும் (இந்தியா) அதைதான் பின் பற்று கிறீர்கள். உங்களை நினைத்து
நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார். நான் அமெரிக்காவில் போய் செட்டில்
ஆனதால் இங்கு எதையும் இழக்கவில்லை. அவ்வப்போது மும்பை வந்து கொண்டுதான்
இருக்கிறேன். சினிமா உலகம் என்னை புறக்கணித்து விட்டது என்று
கூறினார்கள். அது என்னை பாதிக்கவில்லை. இதை நினைத்து கவலைப்பட்டதே
கிடையாது.
ஆலிவுட் , பாலிவுட் என்று நான் பிரித்துப் பார்ப்பதில்லை. நல்ல கதையுடன்
யார் வந்து அணுகினாலும் அவர்கள் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன்.
பாம்புகளை முத்தமிட எனக்கு ரொம்ப பிடிக்கும். பாம்புகளை அதிகம்
நேசிக்கிறேன். இப்போது யாராவது காதலைப் பற்றி பேசினாலே , எரிச்சல் ,
எரிச்சலாக வருகிறது.
நான் இப்போது ஒரு பெண் துறவியாகிவிட்டேன். எனவே , காதல்பற்றி பேசுவதற்கு
ஒன்றுமில்லை. இப்போது , எனது கவனம் முழுவதையும் , தொழில் மீது மட்டுமே
செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger