News Update :
Home » » மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடலாமா...!!

மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடலாமா...!!

Penulis : karthik on Wednesday 12 September 2012 | 22:44

மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடலாமா...!! மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடலாமா...!!

பெண்களின் மாதவிலக்கு பருவத்தில் சிலர் தாம்பத்ய உறவில் ஈடுபடுவார்கள். ஏனெனில் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சமயத்தில் தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற நிலை இயல்பாகவே ஏற்படுமாம். பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால் செக்ஸ் உணர்வு மிகுதியாகும்.

அப்போது தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது பெண்களுக்கு மகிழ்ச் சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும் என்டார்பின் ஹார்மோன் வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு காலவலியையும் குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ளலாமாம்.brbrமாதவிலக்கு காலத்தில் கண்டிப்பாக உறவு கொண்டே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஆண்கள் காண்டம் உபயோகிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோய்கள் பரவாமல் இருக்க உறவின் போது கண்டிப்பாக காண்டம் உபயோகிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.brbrமாதவிலக்கு நாளில் ரத்தப்போக்கு இருக்கும் என்பதால் பெரும்பாலான ஆண்கள் உறவில் ஈடுபட விரும்புவதில்லை.

அந்த நேரத்தில் சுத்தம், சுகாதாரமாக ஈடுபடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.மாதவிலக்கின் முதல் இரண்டு நாட்களில் அதிக ரத்தப்போக்கு, வலி இருக்கும் பெண்களுக்கும் சோர்வு இருக்கும். எனவே முதல் இரண்டு நாட்களை விட்டுவிட்டு மூன்றாவது நாளில் வேண்டுமானால் உறவுக்கு முயற்சிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.அந்த நாளில் உறவில் ஈடுபடும் போது உற்சாகமான விளையாட்டுக்களோடு நிறுத்திக்கொள்ளலாம். வேகமான செயல்பாடு மூலம் உச்சக்கட்டம் வரை செல்வது பாதுகாப்பானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். மாதவிலக்கு சமயத்தில் கூடுமானவரை அதிக வேகமான உறவில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger