உடற்தகுதி குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவராஜ் சிங்
![]() புற்றுநோய்க்கு பின்பும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங், நேற்றைய ஆட்டத்தில் அதĬ 7;ரடியாக விளையாடி ரசிகர்களின் கை தட்டல்களை பெற்றார்.யுவராஜ் சிங், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை ப&# 3014;ற்றுத் திரும்பினார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர், இந்திய அணிக்காக நியூசிலாந்திற்கெதிரான டி20 போட்டியில் நேற்று விளையாடினார். வழக்கம் போல் அதிரடியாக ஆடிய யுவராஜ் 26 பந்தில் 2 சிக்சர் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். 2 ஓவர்கள் மட்டுமே வீசினாலும் எதிர்தரப்பினருக்கு 14 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். புற்றுநோய்க்கு பின்னர் யுவராஜால் முன்புபோல் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கேள்விகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். ஆனால், நேற்றைய போட்டியில் இந்திய அணி போராடிய போதும் 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. |
Post a Comment