மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது சினிமா படமாகிறது. மலையாளத்தில் இப்படத்தை எடுக்கின்றனர். தமிழிலும் வெளியிட மு டிவு செய்துள்ளனர். இதில் கோட்சே வேடத்தில் பிருதிவிராஜ் நடிக்கிறார். ஷாஜி கைலாஜ் இயக்குகிறார்.
பிருதிவிராஜ் வைத்து ஷாஜி கைலாஸ் தற்போது சிம்ஹாசனம் படத்தை டைரக்டு செய்து வருகிறார். இப்படம் முடிந்ததும் கோட்சே படத்தை எடுக்கின்றனர்.
கோட்சேயின் வாழ்க்கை சம்பவங்கள் இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. அவனது குடும்ப சூழல்கள் காந்தியை கொல்ல வகுத்த திட்டங்கள் போன்றவை படமாக்கப்படுகிறது.
இதுகுறித்து ஷாஜி கைலாஸ் கூறும்போது, கோட்சே படம் உணர்வுபூர்வமான திரைக்கதையில் உருவாகிறது. காந்தியை கொல்வதற்கு முந்தைய நாள் கோட்சேயின் மனநிலையும் உணர்வு போராட்டங்கள� �ம் எப்படி இருந்தது என்பதை திரைக்கு கொண்டு வருகிறோம். நல்லதுக்கும், கெட்டதுக்கும் போராட்டத்தை கருவாக வைத்து இந்த படத்தை எடுக்கிறோம். குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு முன் கோட்சேயின் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் படத்தில் சொல்கிறோம் என்றார்.
Post a Comment