நயன்தாரா-த்ரிஷா இடையேயான சண்டை தமிழ்சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. ஏன் சண்டை எ� �்ன பிரச்சினை என்ற கேள்விக்கே இடம் கொடுக்காமல் வரிசையாக பல நடிகர்கள் காரணமாக சொல்லப்பட்டாலும் இருவரும் அதை ஒப்புக்கொண்டதில்லை.
ஜென்ம விரோதியாக பாவிக்கப்பட்டு ரசிகர்கள் மனதில் எதிரெதிராகவே வைக்கப்பட்டிருந்த இருவரும் திடீரென நண்பர்களாக மாறியது தான் ஹைலைட். ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் கட்டித்தழுவி அன்பு பரிமாறிக்கொண்டனர். இப்போது நண்பர்களாக இருக்கும் இருவரும் கூ டிய விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்கிறது சினிமா வட்டாரம்.
த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு ஜோடியாக 'ஓங்காரா' என்ற படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் எடுக்கப்படவிருக்கிறது. சில மாதத்திற்கு முன் நடந்த நடிகர் நாகேஷ்வர ராவ்வின் பிளாட்டினம் ஜூப்ளி நிகழ்ச்சியில் நயன்தாரா அருகில் அமர்ந்ததற்காக ராணாவுக்கும், த்ரிஷாவிற்கும் இடையே சண்டை என பேசிக்கொள்ளப்பட்டது.
Post a Comment