சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் இருவர் வகித்து வந்த கட்சிப் பதவிகளை பறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உ� ��்தரவிட்டதற்கு கவுன்சிலர்களின் அடங்காத அடாவடி வசூல்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் துறைமுகம் கவுன்சிலர் ஆவின் அருள், சேப்பாக்கம் கவுன்சிலர் அலிகான் பஷீர் ஆகியோ வகித்து வந்த கட்சிப் பதவிகளை நீக்கி ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டிர� ��ந்தார்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் மீது ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவர்களை நேரில் அழைத்து கடுமையாக டோஸும் விட்டிருந்தார். ஆனாலும் சில கவுன்சிலர்கள் இஷ்டம் போல் ஆடி வந்திருக்கின்றனர்.
அந்த வகையில்தான் ஆவின் அருளும் அலிகான் பஷீரும் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டிருக்கின்றனர். ஆவின் அருளைப் பொறுத்தவரையில் வடமாநில பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் அலிகான்பஷீர், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கார் பார்க்கிங் நடத்தி வருவதாகவும் புகார்கள் போயஸ் தோட்டத்துக்குப் போயின. இதனை விசாரித்த பிறகுதான் இருவரது கட்சிப் பதவிகளையும் பறித்து மற்ற கவுன்சிலர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார் ஜெயலலிதா என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
Post a Comment