News Update :
Home » » ராஜினாமா கடித மோசடி புகார்: பிரணாப் முகர்ஜி விளக்கம்

ராஜினாமா கடித மோசடி புகார்: பிரணாப் முகர்ஜி விளக்கம்

Penulis : karthik on Wednesday, 4 July 2012 | 20:46


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி, இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் என்ற ஆதாயம் தரும் பதவியை வகித்து வருவதாக பி.ஏ.சங்மா தரப்பு சர்ச்சையை எழுப்பியது. ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே, பிரணாப் முகர்ஜி அப்பதவியை ராஜினாமா செய்து விட்டதாக விளக்கம் அளி� ��்கப்பட்டதால், அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த ராஜினாமா கடிதமே மோசடியாக தயாரிக்கப்பட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக பிரணாப் முகர்ஜி நேற்று கேரளா சென்றார். அங்கு எதிர்க்கட்சிகளின் க� ��ற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, பிரணாப் முகர்ஜி கூறியதாவது:- 

என் கையெழுத்தை யார் மோசடி செய்தது? நானே மோசடி செய்தேனா? ஒருவர் கையெழுத்தை மற்றொருவர் மோசடியாக போடலாம். ஆனால், தனது கையெழுத்தையே ஒருவர் எப்படி மோசடி செய்ய முடியும்? இந்த பிரச்சினை குறித்து தேர்தல் அதிகாரி ஏற்கனவே ஆய்வு செய்துள்ளார். எனவே, இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு தே� ��்தல் அதிகாரிதான் சரியான நபர். நான் அல்ல. 

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். 

மேலும், எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியும் நிராகரித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியதாவது: 

இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் பதவியில் பிரணாப் முகர்ஜி நீடிப்பதாக சர்ச்சை எழுப்புவது சரியல்ல. நிதி மந்திரி பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பே அப்பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். 

மேலும், தேர்தல் அதிகாரியும் அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டு விட்டதால், இந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. தேர்தலில் வெற்றிபெற முடியாததால், பா.ஜனதா இத்தகைய தந்திரத்தில் ஈடுபடுகிற� ��ு. ஜனாதிபதி பதவியின் கவுரவத்தை மனதில் கொண்டு, இத்தகைய தந்திரங்களில் ஈடுபடுவதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger