நிகழ்வுகளும் சடங்குகளும் ஏன் வருகின்றன என்ற மன விரக்த்தியோடு வாழும் யாழ் மக்களின் மனங்களுக்கு விருந்தளிக்க பொங்கலிற்கு வருடப்பிறப்பிற்கு அரங்கேற்றப்படும் கலை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டுக� ��களும் தீணி போடுவதாய் அமைகின்றனவா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
நிம்மதியற்ற மனங்களும் தொடர் இழப்புக்களையும் மரணப்பீதியையும் கடந்து வந்த மக்களின் மனங்கள் கொண்டாட்டங்களை சம்பிரதாயத்தின் அங்கமாக பார்க்கின்றனர். நாள் பார்த்து ஆரவாரத்துடன் அரங்கேற்றப்படும் கொண்டாட்ட நிகழ்வுகள் யாழை திருவிழாக்கோலம் போல அலங்கரித்திருக்கின்றன. இந்த கொண்டாட்ட� �்கள் ஏன் நடத்தப்படுகின்றன எதற்காக நடத்தப்படுகின்றன? என்ன எதிர்பார்ப்புடன் நடத்தப்படுகின்றன யார் நடத்துகின்றார்கள் என்ற விடைதெரியாத கேள்விகள் பல.
பசித்தோடிய வயிறுகளை மரணக்குழிகளில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்கைளை முடிவேயற்றிருந்த சாவோலத்தை பார்த்துக்கொண்டிருந்த
போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை நம்பிக்கை � ��ட்டுவதற்கு எந்த நிலையுமே இல்லாத கையறு நிலையை அழிக்க முடியாத அந்த நினைவுகளை
எப்படி மறப்பது ஓடிக்கொண்டிருந்த செங்குருதியில் வெற்றிக்கழிப்பை கொண்டாடியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். மரணத்தை ஒரு பொறியாக பசியை சுருக்கு கயிறாக பயன்படுத்திய தந்தோரபாயத்தை எந்த மக்களும் மறந்து விடமாட்டரார்கள். இந்த கொடிய நிகழ்வுகளை அனுபவித்த மக்களுக்கு கொண்டாட� �டங்கள் வெறும் கண்துடைப்பே.
நடத்தப்படும் களியாட்டத்திற்கும் விளையாட்டிற்கும் அன்றைய கோவில் திருவிழாக்கள் தான் நினைவுக்கு வரும் கூட்டம் பட்டைய கிளப்பும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர ்கள் இந்த யுத்தத்தை அனுபவிக்காதவர்களா? எல்லாம் கட்டாயம் தான். நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று திட்டமிட்டு திணிக்கப்படும் சர்வாதிகாரம். அரசின் கையில் கிடைத்த கைப்பொம்மைகளாக சொல் பேச்சு கெட்ட பிள்ளை பொல நடத்தப்படுகின்றார்கள். இந்த கொண்டாட்டங்கள் யாரை திருப்திப்படுத்த நடத்தப்படுகின்றன? மக்களின் மனதில் இருக்கும் ஈறாத்துயருக்கு இந்த க� ��ண்டாட்டங்கள் தீணி போடுமா? அல்லது மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவா? இல்லை அரசியல் நாடகமா என்று எண்ணத் தோன்றுகின்றது.
திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த மண்ணில் அடக்குமுறையினை ஜனநாயகத்தின் திறவுகோல்களாக காட்டும் அற்புத நிகழ்வு. ஒரு அரசு தனது குடிமக்களின் குருதியின் மீது வெற்றிதுழக்கம் செய்ததை இந்த உல கத்தின் அத்தனை கண்களும் அன்று பார்த்துக்கொண்டிருந்தது. இன்று எல்லாரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த கொண்டாட்டங்களின் நோக்கம்.
மண்முட்டைகளால் அம ைக்கப்பட்ட காவலரண்களும் மக்களிற்று பாதுகாப்பு கொடுப்பதற்காய் அரசின் பாதுகாப்பு படைகளுமே விழாக் கொண்டாட்டத்தின் முக்கிய புள்ளிகள். வானுயர்ந்த பாட்டுக்ளும் கலை நடனங்களும் ஆட்டம் பாட்டம் என்று ஒற்றுமையுடன் வாழும் சமுதாயம் என்று வெளியுலகிற்கு காட்டும் நிகழ்வில் மீண்டும் பலிகளாய் போகின்றது ஒரு சமுதாயம்.
எல்லாமே ஓய்ந்து விட்ட ன குண்டுமழையின் பீதியும் சுடுகலனின் வேட்டுச்சத்தங்களும் அதிரவைக்கும் துப்பாக்கிச்சத்தமும் இப்போது மக்களின் காதுகளுக்கு எட்டவி்ல்லை. நடந்த போர் ஓய்ந்து விட்டது. ஆனால் புதிய போர் ஆரம்பித்து விட்டது. கொலையும் கொள்ளையும் கற்பளிப்பும் நிம்மதியான தூக்கத்தை கலைத்து விட்டன.
மரணத்தையும் விட மரணபயம் கொடியது. அதையும் விடக்கொடியது மரணத்தை விட அஞ்சுவோரை தேற்றுவது. அதையும் விடக்கொடியது
மரணத்தினால் அலைக்களிக்கப்பட்ட நாட்களை கடப்பது தம் மீதும் குண்டு விழாதா என்று மரணத்திற்காய் ஏங்கியவர்களின் மனதை ஆற்றுவதற்கு விரும்புகின்றார்கள். அடிம� �ல் விழும் அடியை தடுப்பதற்கோ அதற்கு அணை போட யாரும் இல்லை . ஆறுதல் படுத்த முயற்சிக்கின்றார்கள். இவர்கள்.
கடந்த காலங்களில் பெருவிழாக்கள் என்றால் ஊரே விழாக்கோளம் தான் லீவு போட்டு ஓன்றாக ஒற்றுமையாக நம் பண்பாட்டுக்கும் கலைக்கும் முன்னுரிமையும் மரியாதையும் கொடுத்து நடாத்துவார்கள். விளையாட்டுக்களும் கலைகளும் அரங்கேற்றப்படும் இரவைிரவாக ஆண்கள் பெண் கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள். இன்று கட்டாயம் என்ற நிர்ப்பத்தற்திற்காக நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் எனற ஆதிகாரத்தின் பயத்திறகாகவும் கலந்து கொள்கின்றார்கள்.
கழகங்க� ��ும் சங்கங்களும் சோலையிழந்த பிரதேசத்தில் கொண்டாட்டம் ஒரு கேடா என்று ஓய்ந்து விட்டன கழகங்களையும் சங்கங்களையும் நடாத்துவதற்று இளைய தலமுறையின்றி தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.
எவை நடற்தாலும் எமக்கென்ன என்று வாழும் சுறனையற்ற மனிதர்களாய் நடமாடும் நிலை. கடந்த காலங்கள் போனால் போனவை தான் துக்கத்தின் நினைவுகளை கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் அழிய� ��த நினைவுகள்.
மீண்டும் இப்படியொரு யுத்தமும் மனிதப்படுகொலைகளையும் ஏற்க மறுக்கும் மனித மனங்கள். பாதுகாப்பிற்றி தமக்கு தாமே பாதுகாப்பு என்று தினம் தினம் பயத்துடன் வாழும் மக்கள்.
மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமும் உறுதியும் இல்லாத போது களியாட்டங்களும் விளையாட்டுக்களும் எதற்கு யார் கேட்டார்கள் நிம்மதியற்ற மக்கள் நிம்மதியுடன் இதை பார்ப்பார்களா ? பாதுகாப்பிற்கு ஓர் உத்தரவாதம் கொடுங்கள் அப்புறம் நடத்துங்கள் இந்த களியாட்டத்தை.
மக்கள் மனங்களுக்கு தீணி போடாவிட்டாலும் மனங்களை புண்புடுத்தாமல் இருக்கும்.
http://semparuthy.blogspot.com<>
<><><><><><><><><><><><><><>
Post a Comment