News Update :
Home » » மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி

Penulis : karthik on Wednesday, 9 May 2012 | 22:27



மேட்டூர் தொட்டில் பட்டியில் அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு 3 ஷிப்டுகளில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒரு ஷிப்டுக்கு அதிகா ரிகள், ஊழியர்கள், உதவியாளர்கள் என சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் வேலைப்பார்த்து வருகிறார்கள். தினமும் 14 ஆயிரத்து 500 டன் நிலக்கரி இங்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

நேற்று அனல் மின்நிலையத்தில் 3 -வது ஷிப்டில் ஊழியர்கள் வேலை ச� �ய்து கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் நிலக்கரி கொண்டு செல்லும் கண்வேயர் பெல்ட் திடீரென தீ பிடித்தது. பின்னர் அது மளமளவென பரவி மில் பிளாண்ட் (நிலக்கிரி அரைக்கும் பகுதி) வரை எரிந்தது. திடீரென கண்வேயர் பெல்ட் எரிய தொடங்கியதால் அனல் மின் நிலையத்தில் திடீரென புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது. 

அப்போது அங்கு வேலைப்பார்த்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை அறிந்து அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அதற்குள் தீ  பங்கர் டாப் ( நிலக்கரி இருப்பு வைத்துள்ள அறை) வரை எரிந்தது. மேலும் நிலக்கரி கொண்டு செல்லும் கண்வேயர் மற்றும் அதற்குண்டான தளவாடங்கள் அனைத்தும் எரிந்து அப்படியே கீழே விழுந்தது. 

நிலக்கரியை எடுத்து செல்லும் கண்வேயர் பெல்ட் பூமியில் இருந்து சுமார்  20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தீ பிடித்ததும் அதில் இருந்து சுமார் 15 அடி உயரத்துக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. வெளியில் இருந்து பார்த்த போது அனல் மின்நிலையத்தில் தீ பிடித்து எரிவது தெரியவந்தது. இதையடுத்து அக்கம், பக்க� �்தில் உள்ள பொதுமக்கள் அனல் மின் நிலையம் முன்பு திரண்டனர். 

அதிகளவில் நிலக்கரி இருந்ததால் தீயின் தாக்கம், மற்றும் புகை மூட்டமும் அதிகரித்தது. அப்போது அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்த உதவியாளர் நல்லதம்பி (50) என்பவர் மூச்சு திணறி இறந்து விட்டார். மேலும் கோபால் என்பவர் தீ காயம் � �டைந்தார். உடனடியாக அவரை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் உதவி பொறியாளர் அதியமான் என்பவரும் மூச்சுதிணறல் ஏற்பட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த த� �� விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி எழிலரசு, உதவி அதிகாரி முருகேசன் தலைமையில் அனல் மின் நிலைய தீயணைப்பு துறையினர், மற்றும் மேட்டூர், பவானி, ஓமலூர், இடைப்பாடி, ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 9 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மேட்டூர் உதவி கலெக்டர் சூரியபிரகாஷ், டி.எஸ்.பி. கோபால், அனல் மின் நிலைய தலைமை பொறியாளர்கள் மாது, மனோகரன், மற்றும் கருமலைகூடல் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்த தீ விபத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.  தீ விபத்து க ுறித்து அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்





Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger