பெண் சிசுகொல்லை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் டி.வி., நிகழ்ச்சியில் குறிப்பிட்ட கருத்திற்கு ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ராஜ்குமார் சர்மா கண்டனம் தெரிவித்தார்.
அரசு பெண் சிசு கொலையை தடுக்க ஏற்கனவே பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் நடிகர் அமீர்கானோ தான் தீவிர நடவடிக்கை எடுத்தது மாதிரி கருத்து கூறியுள்ளார். நாங்கள் பெண் சிசு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளோம் அது குறித்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்றார்.
அமீர்கான் ஒரு நடிகர். டி.வி., நிகழ்ச்சிக்கு சம்பளம் வாங்கி கொண்டு நடிப்பார். சத்யமேவ் ஜெயதே திட்டமில்லை.
அது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி. அவர் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்குபெறுபவர். நீண்ட நாள் இதற்காக வேலை செய்யமாட்டார். அப்படியே வேலை செய்ய வந்தால் அதை நான் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
Post a Comment