வதந்திகளுக்கு ரொம்ப இஷ்டமானவர்களில் பிரபு தேவாவும் ஒருவர். தினசரி அவரைச் சுற்றி ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டே இருக்க� �ம்.
அந்த வகையில் கடந்த இரு தினங்களாக அவர் பாஷா படத்த இந்தியில் இயக்கப் போவதாகவும் அதில் அஜய் தேவ்கன் நடிக்கப் போவதாகவும் தெய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து பிரபு தேவாவிடமே கேட்டபோது, "எங்கிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் வருகின்றனவோ தெரியவில்லையே... ரஜினி சார் நடித்த பாட்ஷா ஒரு க்ளாசிக் படம். இன்னும் எத்தனை ஆ� ��்டுகள் கழித்துப் பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அந்தப் படத்தை ரீமேக் செய்வதெல்லாம் முடியாத விஷயம். அந்த அழகு, நம்பகத்தன்மை எதுவுமே ரீமேக்கில் இருக்காது. நான் அஜய் தேவ்கனை வைத்து படம் பண்ணுவது உண்மைதான். ஆனால் அதன் க� ��ை வேறு," என்றார்.
இதற்கிடையே, ஜூன் 7-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவின் துவக்க நாளில் பிரபு தேவா நடனமாடப் போகிறாராம். உடன் ஆடப் போகிறவர் சோனாக்ஷி சின்ஹா!
Post a Comment