Thursday, 31 May 2012
அஜீத் நடித்துள்ள பில்லா-2 ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஜூன் மாதம் 15-ம் தேதி பில்லா-2 ரிலீஸாகிறது. இந்த வருடம் அஜீத் 3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் பில்லா-2 ஷூட்டிங் முடிந்த சில நாட்களிலேயே அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்திற்கு தயாராகிவிட்டார் அஜித்.
மே 30-ம் தேதி முதல் விஷ்� ��ுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைகிறார்கள். மேலும் சிறப்பு அம்சமாக தெலுங்கு நடிகர்களை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம் இயக்குனர்.
கௌரவ வேடத்தில் நடிக்க தெலுங்கு திரைஉலகின் முன்னனி நடிகர்களான நாகார்ஜுனா, ரவி தேஜா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அஜீத்தின் மங்காத்� ��ா படம் தெலுங்கிலும் வெளியாகி பிரபலமானது. இந்தப் படத்தையும் தெலுங்கில் வெளியிட ப்ளான் இருக்கிறதாம். அதனால் தான் தெலுங்கு நடிகரை நடிக்க வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்க ஆசைப்படுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
அஜீத்தும் அதையே தான் விரும்புகிறாராம்.அரவிந்த் சாமி, பிருத்திவிராஜ் ஆகியோரிடமும் கால்ஷீட் கேட்டதாகத் தெரிகிறது. அரவிந்த்சாமி மணிரத்னம் இயக்கு ம் கடல் படத்தில் நடித்துக்
கொண்டிருப்பதால், அந்த படம் முடிந்த பிறகு விஷ்ணுவர்தன் படத்திற்கு கால்ஷீட் தருவதாக கூறியுள்ளாராம்.
இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா-2 என தொடர்ந்து அஜீத் நடித்த படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.