News Update :
Home » » நார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

நார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

Penulis : karthik on Monday 30 April 2012 | 08:26




நார்வே தமிழ் திரைப்பட  விழாவில் 'வாகை சூட வா'வுக்கு  சிறந்த  பட விருதும், 'உச்சிதனை முகர்ந்தால்' க்கு நள்ளிரவுச் சூரியன் விரு� ��ும் வழங்கப்பட்டது.

2012-ம் ஆண்டிற்கான நார்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25 ம் தேதி நார்வே  தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. லொரன்ஸ்கூவில் உள்ள அரங்கிலும் படங்கள்  திரையிடப்பட்டன.

கட்ந்த சனிக்கிழமை குறும்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விழாவின்  இறுதிநாளான நேற்று பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ் திரையுலகிலிருந்து இயக்குனர் சற்குணம், நடிகை ரிச்சா, தூங்கா நகரம் இயக்க� ��நர்  கவுரவ், பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபுபுன்னகைப்பூ கீதா, < span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தயாரிப்பாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா  பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே), பிரவீனா(நோர்வே)மாளவி சிவகணேஷன்(நோர்வே) ஆகிய� �ருடன் 'Yarl stars' இசைக் குழுவினர்  இணைந்து வழங்கும் "நள்ளிரவுச் சூரியன்" இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் திரைப்படங்களுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட விருதுகள்  அறிவிக்கப்பட்டன.

விருதுகள் விவரம்:

சிறந்த படம் - வாகை சூட வா

சிறந்த இயக்குநர் - சற்குணம் (வாகை சூட வா)

சிறந்த நடிகர் - ஸ்பெஷல் ஜூரி விருது - நடிகர் விஷால் (அவன் இவன்)

சிறந்த நடிகர் - எம் சசிகுமார் (போராளி)

சிறந்த நடிகை - ரிச்சா கங்கோபாத்யாய் (மயக்கம் என்ன)

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகை - தேவதர்ஷினி (மகான் கணக்கு)

சிறந்த கதை - புகழேந்தி தங்கராஜ் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த திரைக்கதை- சுசீந்திரன் (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம் நாதன் (கோ)

சிறந்த பாடலாசிரியர் - காசி ஆனந்தன் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த தயாரிப்பு நிறுவனம் - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் (அழகர்சாமியின்  குதிரை)

சிறந்த வில்லன் - சம்பத் (வர்ணம் & ஆரண்ய காண்டம்)

சிறந்த காமெடி - கஞ்சா கருப்பு (போராளி)

சிறந்த காமெடி - சூரி (போராளி)

சிறந்த பின்னணி பாடகர் - சத்யா ('மாசமா...' எங்கேயும் எப்போதும்)

சிறந்த பின்னணி பாடகி - சின்மயி ('சர சர சாரக் காத்து...'- வாகை சூட வா)

சிறந்த நடனம் - பாபி (போறானே... - வாகை சூட வா)

சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - பீட்டர் ஹெய்ன் (கோ)

சிறந்த ஸ்டன்ட் நடிகர் - கணேஷ் பாபு (மகான் கணக்கு)

சிறந்த எடிட்டிங் - கோலா பாஸ்கர் (மயக்கம் என்ன)

சிறந்த கலை இயக்குநர் - சீனு (வாகை சூட வா)

சிறந்த பின்னணிக் குரல் - தீபா வெங்கட் (மயக்கம் என்ன)

சிறந்த புதுமுகம் - நீனிகா (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த மேக் அப் - கேபி சசிகுமார் (வாகை சூட வா)

சிறந்த உடை அலங்காரம் - நட்ராஜ் (வாகை சூட வா)


சிறப்பு விருதுகள்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வெங்காயம்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - நர்த்தகி

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - பாலை

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வர்ணம்

வாழ்நாள் சாதனையாளர் விருது - ரகுநாதன்

கலைச்சிகரம் விருது - சத்யராஜ்

நள்ளிரவுச் சூரியன் விருது - உச்சிதனை முகர்ந்தால்

தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தும் படத்துக்கான சிறப்பு விருது கவுரவ் இயக்கிய தூங்கா  நகரம் படத்துக்கு வழங்கப்பட்டது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger