News Update :
Home » » ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி

Penulis : karthik on Monday 30 April 2012 | 02:38




ஐ.நா. மனித உரிமை பேரவையி� �் இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற அறிக்கையை அமெரிக்கா கடந்த மாதம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. ஆனால் இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஓட்டு போட்டன. இருந்தும் அந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.
 
இதனால் இலங்கைக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ச� ��னா, ரஷியா வெளியேற்றம் இந்த நிலையில் வருகிற நவம்பர் 1-ந்தேதி ஜெனிவாவில் உள்ள ஐ.நா,. மனித உரிமைகள் ஆய்வு கூட்டம் நடக்கிறது அதில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா, ரஷியா, சவுதி அரேபியா, வங்காள தேசம் ஆகிய 4 நாடுகள் வெளியேறுகின்றன.
 
ஐ.நா. மனித உரி� ��ைகள் பேரவையில் 47 நாடுகள் மட்டுமே உறுப்புரிமை வகுக்க முடியும் எனவே, ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு அதில் இடம் பெற சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, ரஷியா, சீனா, சவுதி அரேபியா, வங்காள தேசம் ஆகிய 4 நாடுகளின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிகிறது. எனவே, நவம்பர் மாதம் நடைபெறக் கூடிய ஆய்வு கூட்டத்தில் அந்த நாடுகள் கலந்து கொள� �ள முடியாது.
 
அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் சீனாவும், ரஷியாவும் முக்கிய நாடுகளாகும். ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் அவைகள் பங்கேற்க முடியாமல் போவது இலங்கைக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்த நாடு கவலை அடைந்துளளது. இருந்தாலும், வெளியில் இருந்தபடி அந்த நாடுகள் ஆதரவளிக்கும் என நம்புவதாக இலங்கை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger