சசிகலா கணவர் நடராஜன் மீது தாம் கொடுத்த புகாரை தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார ஆட்சி அலுவலர் ரங்கராஜன் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.
எம். நடராஜன், அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் மீது கடந்த மாதம் தஞ்சாவூர் அன்பு நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார ஆட்சி அலுவலர் ரங்கராஜன் நிலஅபகரிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை ரங்கராஜன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நடராஜன் மற்றும் அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் மீது தவறுதலாக வழக்கு தொடர்ந்து விட்டேன் என்று கூறியுள்லார்.
மேலும் அந்த வழக்கில் குறிப்பிட்டபடி நிலஅபகரிப்பு ஏதும் நடக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நிலத்தை சுவாமிநாதன் விலைக்கு வாங்கி முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் தெ ரிந்த கொண்டதால் வழக்கைத் திரும்பப் பெறுவதாகவும் அதில் ரங்கராஜன்குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நடராஜன் மீதான வழக்குகளில் ஒன்று குறைந்திருக்கிறது.
Post a Comment