News Update :
Powered by Blogger.

அசாம் படகு விபத்து: சாவு எண்ணிக்கை 103 ஆக உயர்வு

Penulis : karthik on Monday, 30 April 2012 | 23:13

Monday, 30 April 2012




அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தின் வழியாக பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது. இந்தப் பகுதி மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு � �டத்துக்கு செல்ல படகு போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். நேற்று மாலை 4 மணி அளவில் துப்ரி பகுதியில் இருந்து ஹத்சிங்கி மரிநோக்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சென்று கொண்டு இருந்தது.

அதில் குழந்தைகள் பெண்கள் என 250 முதல் 300 பயணிகள் வரை இருந்தனர். ஆற்றின் நடுப்பகுதியில் சென்றபோது மோசமான வானிலை நிலவியது. பலத்த சூறாவளியுடன் மழை பெய்தது. இதில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் ஆற்று வெள்ளத்தில் தத்தளித்தனர். நீச்சல் தெரிந்த 25 பேர் மட்டும் ந ீந்தி கரை சேர்ந்தனர். அவர்கள் படகு கவிழ்ந்தது பற்றி மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. உள்ளூர் தீயணைப்பு படையினர் போலீசாருடன் இணைந்து படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே மிதந்தது. உடனடியாக 37 பிணங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றது. இ� ��்று காலை வரை 103 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், படகில் பயணம் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் தடுப்பு படை பிரிவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. படகில் 300 பேர் வரை பயணம் செய்துள்ளனர். 25 பேர் மட்டுமே உயிருடன் திரும்பியுள்ளனர். எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று மாவட்ட து� �ை கமிஷனர் குமுசந்திரக கவிதா கூறினார். படகு விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்து பற்றி விசாரணை நடத்த மாநில முதல்-மந்திரி அருண் கோகாய் உத்தவிட்டுள்ளார். இந்த விபத்து நடந்த அதே நேரத்தில் ஜாலேஸ்வர் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற மற்றொரு படகும் கவிழ்ந்தது. இதில் 12 பேர் பலியானர்கள். இந்தப்பகுதியில் சூறாவளியுடன் மோ� �மான வானிலை நிலவுவதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதை கவனிக்காமல் சென்றதால் இந்த கோர சம்பவம் நடந்ததாக மாவட்ட துணை கமிஷனர் கவிதா கூறினார்.



comments | | Read More...

தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட உலக வர்த்தக மைய கட்டிடம் நியூயார்க்கில் மீண்டும் உதயம்




a
அமெரிக்காவின் நியூயார� �க் நகரில் 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்' என்ற பெயரில் உலக வர்த்தக மைய கட்டிடம் இருந்தது. இரட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்று இருந்தது.
 
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி அந்த கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோத வைத்து தகர்த்து தரை மட்டமாக்கினர். இதில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  
 
உலக பெருமை வாய்ந்த அந்த கட்டிடத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நியூயார்க்கில் மீண்டும் இரட்டை கோபுரங்களுடன் வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில், ஒரு கட்டிடம் 1250அடி (381 மீட்டர்) உயரத்திலும், மற்றொன்று 1,776 அடி (541.3 மீட்டர்) உயரத்திலும் கட்டப்படுகிறது.
 
அதில் 1250 அடி உயர கோபுரம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது.   மற்றொரு கோபுரம் அடுத்த ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடம் 104 அடுக்குமாடிகளை கொண்டதாக கட்டப்படுகிறது. இதன் மூலம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் எந்த அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது.



comments | | Read More...

சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன்- பிரசன்னா பேட்டி



நடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை சினேகாவுக்கும் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. இது, காதல், கலப்பு த ிருமணமாகும். சினேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். பிரசன்னா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். 

திருமணம் தொடர்பாக சினேகாவும், பிரசன்னாவும் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார்கள். அப்போ து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திருமணத்துக்குப்பின் சினேகா தொடர்ந்து நடிப்பாரா? 
பிரசன்னா பதில்:- திருமணத்துக்குப்பின் சினேகா நடிக்கவேண்டும� �� என்பதுதான் எனது விருப்பம். அவர் நல்ல நடிகை என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. திருமணத்துக்குப்பின் அவர் விருப்பப்பட்டால் நடிக்கலாம், நடிக்காமலும் இருக்கலாம். அவருக்கு, நான் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். 

கேள்வி:- தேன் நிலவுக்கு எந்த நாட்டுக்கு போகிற ீர்கள்? 
பிரசன்னா பதில்:- சினேகாவும், நானும் நடித்து முடித்துக்கொடுக்க வேண்டிய சில படங்கள் உள்ளன. அந்த படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு, வருகிற ஜுன் மாதம் தேன் நிலவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். எந்த நாட்டுக்கு செல்வது என்பதை முடிவு செய்யவில்லை. திருமணத்துக்குப்பிறகு பார்க்கல� ��ம். 

கேள்வி:- உண்மையை சொல்லுங்கள். நீங்கள் எத்தனை வருடங்களாக காதலித்தீர்கள்? 
பிரசன்னா பதில்:- இரண்டு வருடங்களாக காதலித்தோம். எங்கள் 2 பேரின் வீட்டிலும் சம்மதித்தபிறகுதான், காதல் பற்றி வெளியில் ச ொல்ல ஆரம்பித்தோம். 

கேள்வி:- உங்கள் இருவரில் காதலை முதலில் பரிமாறிக்கொண்டது யார்?
பிரசன்னா பதில்:- நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகவே இருந்தோம். எங்களுக்கிடையே காதல் மலர்ந்தபின் திரு மணம் செய்துகொண்டால் என்ன? என்று யோசிக்க ஆரம்பித்தோம். வாழக்கைப் பற்றி நிறைய பேசினோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். நான், அவருக்கு கணவராக இருந்தால் எப்படி இருக்கும்? அவர், எனக்கு மனைவியாக வந்தால் எப்படி இருக்கும்? என்பதை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். இருவருக்குமே வாழ்க்கையைப் பற்றி ஒரேமாதிரியான அபிப்பிராயம் இருந்தது. 

கேள்வி:- உங்கள் திருமணம் எந்த முறைப்படி நடக்கும்? 
பிரசன்னா பதில்:- சினேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் அந்த முறைப்படி முதலில் திருமணம் நடக்கும். அதன்பிறகு எங்கள் பிராமண முறைப்படி நடக்கும். சினேகா கழுத்தில் நான் இரண்டு முறை ஸ்ட்ராங ் காக தாலி கட்டுவேன். 

கேள்வி:- திருமணம் முடிந்தபின் தனிக்குடித்தனமா, கூட்டு குடித்தனமா? 
பிரசன்னா பதில்:- தனிக்குடித்தனம்தான். சினேகாவுக்கு சாதாரண பெண்ணாக சமையல் எல்லாம் செய்து வாழவேண்டும் என்� �ு ஆசை. எனவே திருமணம் முடிந்ததும் தனிக்குடித்தனம் போவோம். 

இவ்வாறு பிரசன்னா பதில் அளித்தார். 

அதன்பிறகு சினேகா கூறியதாவது:- 
நான் கடந்த 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. திருமணத்துக்குப்பிறகு நான் நடிப்பதா, வேண்டாமா? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணம் முடிந்தபிறகு அதை பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். 

மேற்க� ��்டவாறு சினேகா கூறினார்.




comments | | Read More...

பில்லா 2 பாடல்கள் டவுன்லோட் (Mediafire)







Theme Music Promo
Download Link : Mediafire 
Gangster promo
Download Link : Mediafire 
Yedho Mayakkam
Download Link : Mediafire 
Madurai Ponnu
Download Link : Mediafire 
Unakkulle Mirugam
Download Link Mediafire
Idhayam
Download Link  ;: Mediafire




comments | | Read More...

ஐபிஎல் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வென்றது கொல்கத்தா அணி




ஐபிஎல் போட்டித் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கவுதம� � காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.    

சென்னை அணி இதுவரை தான் ஆடிய 9 ஆட்டங்களில் 4 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை தான் ஆடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெ� ��்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.   

இந்த ஐபிஎல் சீஸனில் கொல்கத்தா அணியும் சென்னை அணியும் மோதும் முதல் போட்டி இதுவாகும். சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததால் மைக் ஹஸ்ஸி சென்னை அணிக்� ��ு திரும்பியுள்ளார். குலசேகராவுக்கு பதிலாக இவர் அணியில் இடம்பிடித்துள்ளர். கடந்த போட்டியில் விளையாடிய விரித்திமன் சஹா நீக்கப்பட்டு யோ மகேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.   

கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . அதன்படி சென்னை அணியின் துவக்க வீரர்களாக மைக் ஹஸ்ஸியும் டூ பிளிசிஸ்ஸும் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை பிரெட் லீ வீசினார். இவரது சிறப்பான பந்துவீச்சில் டு பிளிசிஸ் (3 ரன்கள்) ஆட்டமிழந்தார். 

இவரையடுத்து சுரேஷ் ரெய்னா, மைக் ஹஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆட்டத்� �ை துவக்கிய ஹஸ்ஸி 18 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.   

இவரையடுத்து ரெய்னாவுடன் பிராவோ ஜோடி சேர்ந்தார். பிராவோ 12 ரன்னும், ரெய்னா 44 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும்  எடுத்து ஆடமிழந்தனர். ரெய்னா 34 ரன்கள் எடுத்தபோது ஐ.பி.எல் போட்டிகளில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை அடைந்தார். ஐ.பி.எல் ப ோட்டிகளில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையோடு ரெய்னா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.    

இறுதி கட்டத்தில் டோனியும், மோர்கலும் அதிரடியாக முயன்றனர். எனினும் கொல்கத்தா வீரர்கள் துல்லியமான, பந்துவீச்சினால் அவர்களால் அதிரடி காட்ட முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவ� �்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. டோனி 34 ரன்னுடனும், மோர்கல் 13 ரன்னுடனும் களத்த்ல் இருந்தனர்.  

பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவுதம் காம்பீர், மெக்கெல்லமும் களம் இறங்கி விளையாடினர். ஆட்டத்தின் 3- வது ஓவரில் மெக்கெல்லம் 2 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் கேட்சானார். 

அடுத்து வந்த ஜாக் காலிஸ் காம்பீருடன் இணைந்து விளையாடினார். 13-வது ஓவரில் காலிஸ் 26 ரன் எடுத்திருந்த போது பிராவோ பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

இதணையடுத்து களம் வந்த மனோஜ் திவாரி 13 ரன்னில் வெளியேறினார்.   சிறப்பாக விளையாடி வந்த காம்பீர் 63 ரன் எடுத்து பிராவோ பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் பெவுலியன் திரும்பினார். 

அடுத்து வந்த பதான் 12 வெளியேற அதன் பின் � �ந்த வீரர்களான தாஸ், சுக்லாவும் சிறப்பாக விளையாடி 19,5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.



comments | | Read More...

விரைவில் உருவாகிறது நவீன டைட்டானிக் கப்பல்




புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் வடிவமைப்புடன் நவீன வசதிகள் அடங்கிய புதிய டைட்டானிக் கப்பல் ஒன்றை உருவாக்க ஆஸ� �திரேலியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில்
ஒருவரான கிளைவ் பாமர், அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இவ்வகையான கப்பலை உருவாக்குமாறு சீன அரசுக்கு சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களிடம் கிளைவ் பாமர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலை உருவாக்கும் பணி அடுத்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் 2016ஆம் ஆண்டு இக்கப்பல் உருவாக்கப்பட்டு கடல் பயணங்களுக்குத் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.

வடிவமைப்பு, கப்பலின் அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், இது கடந்த நூற்றாண்� �ின் டைட்டானிக் கப்பலை ஒத்ததாகவே உருவாக்கப்படும் ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதே தனது திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சி.எஸ்.சி. ஜின்லிங் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இக்கப்பலை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே ( ஏப்ரல் 15, 1912) பனிப்பாறையில் மோதி மூழ்கிய ஒரு கப்பல். இக்கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவு தினம் கடந்த ஏப்ரல்-15 ம் � �ேதி அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' 1st look போட்டோ










comments | | Read More...

நார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு!




நார்வே தமிழ் திரைப்பட  விழாவில் 'வாகை சூட வா'வுக்கு  சிறந்த  பட விருதும், 'உச்சிதனை முகர்ந்தால்' க்கு நள்ளிரவுச் சூரியன் விரு� ��ும் வழங்கப்பட்டது.

2012-ம் ஆண்டிற்கான நார்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25 ம் தேதி நார்வே  தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. லொரன்ஸ்கூவில் உள்ள அரங்கிலும் படங்கள்  திரையிடப்பட்டன.

கட்ந்த சனிக்கிழமை குறும்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விழாவின்  இறுதிநாளான நேற்று பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ் திரையுலகிலிருந்து இயக்குனர் சற்குணம், நடிகை ரிச்சா, தூங்கா நகரம் இயக்க� ��நர்  கவுரவ், பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபுபுன்னகைப்பூ கீதா, < span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தயாரிப்பாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா  பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே), பிரவீனா(நோர்வே)மாளவி சிவகணேஷன்(நோர்வே) ஆகிய� �ருடன் 'Yarl stars' இசைக் குழுவினர்  இணைந்து வழங்கும் "நள்ளிரவுச் சூரியன்" இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் திரைப்படங்களுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட விருதுகள்  அறிவிக்கப்பட்டன.

விருதுகள் விவரம்:

சிறந்த படம் - வாகை சூட வா

சிறந்த இயக்குநர் - சற்குணம் (வாகை சூட வா)

சிறந்த நடிகர் - ஸ்பெஷல் ஜூரி விருது - நடிகர் விஷால் (அவன் இவன்)

சிறந்த நடிகர் - எம் சசிகுமார் (போராளி)

சிறந்த நடிகை - ரிச்சா கங்கோபாத்யாய் (மயக்கம் என்ன)

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகை - தேவதர்ஷினி (மகான் கணக்கு)

சிறந்த கதை - புகழேந்தி தங்கராஜ் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த திரைக்கதை- சுசீந்திரன் (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம் நாதன் (கோ)

சிறந்த பாடலாசிரியர் - காசி ஆனந்தன் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த தயாரிப்பு நிறுவனம் - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் (அழகர்சாமியின்  குதிரை)

சிறந்த வில்லன் - சம்பத் (வர்ணம் & ஆரண்ய காண்டம்)

சிறந்த காமெடி - கஞ்சா கருப்பு (போராளி)

சிறந்த காமெடி - சூரி (போராளி)

சிறந்த பின்னணி பாடகர் - சத்யா ('மாசமா...' எங்கேயும் எப்போதும்)

சிறந்த பின்னணி பாடகி - சின்மயி ('சர சர சாரக் காத்து...'- வாகை சூட வா)

சிறந்த நடனம் - பாபி (போறானே... - வாகை சூட வா)

சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - பீட்டர் ஹெய்ன் (கோ)

சிறந்த ஸ்டன்ட் நடிகர் - கணேஷ் பாபு (மகான் கணக்கு)

சிறந்த எடிட்டிங் - கோலா பாஸ்கர் (மயக்கம் என்ன)

சிறந்த கலை இயக்குநர் - சீனு (வாகை சூட வா)

சிறந்த பின்னணிக் குரல் - தீபா வெங்கட் (மயக்கம் என்ன)

சிறந்த புதுமுகம் - நீனிகா (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த மேக் அப் - கேபி சசிகுமார் (வாகை சூட வா)

சிறந்த உடை அலங்காரம் - நட்ராஜ் (வாகை சூட வா)


சிறப்பு விருதுகள்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வெங்காயம்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - நர்த்தகி

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - பாலை

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வர்ணம்

வாழ்நாள் சாதனையாளர் விருது - ரகுநாதன்

கலைச்சிகரம் விருது - சத்யராஜ்

நள்ளிரவுச் சூரியன் விருது - உச்சிதனை முகர்ந்தால்

தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தும் படத்துக்கான சிறப்பு விருது கவுரவ் இயக்கிய தூங்கா  நகரம் படத்துக்கு வழங்கப்பட்டது.



comments | | Read More...

எம்ஜியாரை இயக்கும் சுந்தர்.சி!




வெடி' படத்� �ினை அடுத்து விஷால் நடித்துவரும் படம் 'சமரன்'. இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.  ' தீரா� � விளையாட்டு பிள்ளைஇயக்கிய  திரு இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது 'சமரன்' என்ற தலைப்பினை 'சமர்' என்று மாற்றி இருக்கிறார்கள்.

இப்படத்தினை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால்.
மூன்று வேடங்களில் விஷால் நடிக்க இருக்கு ம் இப்படத்திற்கு சுந்தர் சி. 'MGR' (Madhan, Gaja, Raja) என்று தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்கள்.

விஷால் இப்படத்தில் மதன், கஜா, ராஜா என்ற மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதால் இந� �த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இத்தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்களாம்

இப்படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்க இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையில் இப்படத்தில் இடம் பெறும் ஒரு குத்து பாடலுக்கு, சதா நடனமாட இருக்கிறார்.

மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'கொசுறு' கபாலி :  " டைரக்டர் சார்.. உங்க வீட்ல இந்த டைட்டிலுக்கு என்ன சொன்னாங்க? "



comments | | Read More...

நித்தியானந்தாவை மதுரையை விட்டு வெளியேற்றுக... மதுரை கலெக்டரிடம் மனு




மதுரை ஆதீன மடத்திலிருந்து உடனடியாக நித்தியானந்தாவை வெளியேற்ற வேண்டும். அவரை மதுரையை விட்டு வெளியேற்ற வேண்டு� �். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பூசைதுரை என்பவர் மதுரை கலெக்டர் சகாயத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில், மதுரை ஆதினமாக நித்தியானந்தாவை பதவியேற்க செய்ததை உடனே ரத்து செய்து, அவர ை மதுரையை விட்டு வெளியேற்ற வேண்டும். அவர் மீது உள்ள கிரிமினல் நடவடிக்கைகள் இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

நித்தியானந்தா ஆதினமாகப் போவதை உடனே தடுத்து நிறுத்தி, ஆதின மடத்தை மீட்டு தமிழக அரசு வசம் ஒப்படைக்க வேண்டும். குறுக்கு வழியில் பதவியேற்ற ஆதினப் பதவியை ரத்து செய்ய வேண்ட ும்.

குற்ற நடவடிக்கையில் இருக்கும் ஒருவரை எப்படி ஆதினமாக, மதுரை ஆதினம் ஏற்றுக்கொண்டார் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளா



comments | | Read More...

இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!




பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் � �ருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒ ரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.




comments | | Read More...

கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ அமைப்பு



தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைப்பு ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. முன்பு போலவே இந்த அமைப்புக்கு, 'தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு' என்று தமிழிலும் Tamil Eelam Supporters Organaisation (TESO) என்று ஆங்கித்திலும் பெயர் சூட்டப்பட்டது. 

கர� �ணாநிதி தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த அமைப்பின் குறிக்கோள் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கை:- 
பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம், மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணி அணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு 'தனித் தமிழ் ஈழம்' அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலை யை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர� �த் தலைவராகக் கொண்ட விசாரணைக்குழு, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. 

வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இர� �ப்பதாகக் கூறியுள்ளது. 

இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25-ந்தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு, போர்க் கைதிகளையும� � கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரண� �ானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும். என்றும் 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாக கேட்டுக் கொண்டு� �்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. 

தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழ் ஊர்ப்பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இ� ��்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. 

இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டு ள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. 

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன. 

அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், 

இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடி யேற்றப்பட்ட சிங்களர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது. 

நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆ� ��ரவினையும் நல்குவதோடு, ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தரவேண்டும்.

தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப ்பு ஒன்று புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது. 

இதன்மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப்போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது. தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம், தமிழர்கள் � ��ாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும், அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.




comments | | Read More...

லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்த ஈழத்தமிழ் மாணவர் தேர்வு




லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன்னர் போட்டிக்கான தீபத்தை ஏந்துவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் இலங்� ��ையைத் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவரும்.

லண்டனில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக 8 ஆயிரம் துவாரங்கள் கொண்ட அலுமினிய தீபம் உருவாக்கப்பட்டுள்ளது.

8 ஆயிரம் துவாரங்கள் கொண்ட இத்தீபத்தை 8 ஆயிரம் பேர் 8 ஆயிரம் மைல்கள் எடுத்துச் செல்வர். இந்த ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லப்படும் பாதைகள், ஏந்திச் செல்வோர் பற்றிய விவர� �்கள் அனைத்தும் வெளியாகி உள்ளன.

இப்படி ஏந்திச் செல்வோரில் நியூகாஸ்டல் பல்கலைக் கழகத்தில் உயிரி மருத்துவம் படித்து வரும் முருகேசப்பிள்ளை கோபிநாத் என்ற மாணவரும் ஒருவர்.

இவர் இலங்கை மல்லாவியைச் செர்ந்தவர். தாம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தமக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது என்கிறார் முருகேசப்பிள்ளை கோபிநாத்.



comments | | Read More...

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி




ஐ.நா. மனித உரிமை பேரவையி� �் இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற அறிக்கையை அமெரிக்கா கடந்த மாதம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. ஆனால் இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஓட்டு போட்டன. இருந்தும் அந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.
 
இதனால் இலங்கைக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ச� ��னா, ரஷியா வெளியேற்றம் இந்த நிலையில் வருகிற நவம்பர் 1-ந்தேதி ஜெனிவாவில் உள்ள ஐ.நா,. மனித உரிமைகள் ஆய்வு கூட்டம் நடக்கிறது அதில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா, ரஷியா, சவுதி அரேபியா, வங்காள தேசம் ஆகிய 4 நாடுகள் வெளியேறுகின்றன.
 
ஐ.நா. மனித உரி� ��ைகள் பேரவையில் 47 நாடுகள் மட்டுமே உறுப்புரிமை வகுக்க முடியும் எனவே, ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு அதில் இடம் பெற சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, ரஷியா, சீனா, சவுதி அரேபியா, வங்காள தேசம் ஆகிய 4 நாடுகளின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிகிறது. எனவே, நவம்பர் மாதம் நடைபெறக் கூடிய ஆய்வு கூட்டத்தில் அந்த நாடுகள் கலந்து கொள� �ள முடியாது.
 
அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் சீனாவும், ரஷியாவும் முக்கிய நாடுகளாகும். ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் அவைகள் பங்கேற்க முடியாமல் போவது இலங்கைக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்த நாடு கவலை அடைந்துளளது. இருந்தாலும், வெளியில் இருந்தபடி அந்த நாடுகள் ஆதரவளிக்கும் என நம்புவதாக இலங்கை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger