திரிசூலம் :சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 15 லட்சம் பாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் முகம்மது குரோசி, 38, சபிபுல்லா, 42. இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, சிங்கப்பூரில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர்.
கஸ்டம்ஸ் சோதனையின்போது, இருவரும் விலை உயர்ந்த மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், ஹேண்டி கேமரா, டிஜிட்டல் கேமரா என, 15 லட்சம் பாய் மதிப்புள்ள பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வந்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த கஸ்டம்ஸ்
அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://tamil-shortnews.blogspot.com
Post a Comment