ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைத்த பிரேரணையில், அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், பிரேரணையில் இதனை உள்ளடக்குமாறு கோரியும், லண்டனில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பெருமளவான தமிழ் மக்கள் திரண்டு, தமது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு மக்களை ஈடுபட வேண்டாம் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்த வேண்டாம் என்றும் லண்டனில் இயங்கும் ஒரு தனியார் வானொலி பிரச்சாரம் செய்த போதிலும், மக்கள் அதனை நிராகரித்து போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment