News Update :
Home » » மம்தாவின் கட்டண நாடகம்,

மம்தாவின் கட்டண நாடகம்,

Penulis : karthik on Friday, 16 March 2012 | 00:14

 
 

ரயில்வே பட்ஜெட்
"கட்சிக் கட்டுப்பாட்டை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. தினேஷ் திரிவேதி என் னையோ, முகுல்ராயையோ கலந்தாலோசிக்கவில்லை. ரயில் கட்டண உயர்வு மக்க ளின் துன்பங்களை அதிகரிக் கும்" என்று திரிணாமுல் காங் கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சரு மான மம்தா பானர்ஜி கூறியுள் ளார்.

கட்டண உயர்வு உள்பட மக்கள் மீது சுமையை ஏற்றும் அறிவிப்புகளுடன் கூடிய ரயில்வே பட்ஜெட்டை தாக் கல் செய்த குற்றத்திற்காக ரயில்வே அமைச்சர் பொறுப்பிலிருந்து தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டு மென்றும் அந்த இடத்தில் முகுல்ராயை நியமிக்க வேண்டுமென்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.



"தினேஷ் திரிவேதி தனிப் பட்ட முறையில் செயல்பட்டு விட்டார். அவர் தனிநபர். எனவே ரயில்வே அமைச்சர் பொறுப்பில் நீடிக்கக்கூடாது. அவர் தான் அறிவித்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண் டும். இல்லையெனில் அமைச்ச ராக நீடிக்கக்கூடாது. அதே நேரத்தில் நாங்கள் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசாங்கத் தை முழுமையாக ஆதரிக் கிறோம். அரசாங்கத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று மம்தா கட்சியின் நாடாளுமன் றக்குழு தலைவர் சுதீப் பத்தோ பாத்யாயா, தில்லியில் நாடாளு மன்றத்திற்கு வெளியில் பேட்டி கொடுத்தார்.

தினேஷ் திரிவேதி என்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் மிக முக்கிய மூத்த தலைவர். முகுல்ராய் என்பவர் திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர். காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சுக்கு அக்கூட்டணிக்கு உள்ளே இருந்து ஆதரவு அளித்துவரும் மிக முக்கிய கட்சி திரிணாமுல் காங்கிரஸ். இந்த கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தினேஷ் திரிவேதி ரயில்வே அமைச்ச ராகவும், முகுல்ராய் கப்பல் துறை அமைச்சராகவும் மன் மோகன் அரசின் மிக முக்கிய மான பொறுப்புகளை வகித்து வருகிறார்கள்.

அரசுக்கு உள்ளே இருந்து, அமைச்சரவையில் பங்கு பெற்று, ஐ.மு.கூட்டணி அரசின் அனைத்து முடிவுகளையும் அமைச்சரவைக் கூட்டங்களில் ஏற்றுக் கொண்டு திரிணாமுல் காங்கிரசும், மம்தாவின் வழி காட்டலோடு செயல்படுகிற மேற்கண்ட அமைச்சர்களும் பதவி வகித்து வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் மார்ச் 14 புதனன்று நாடாளுமன்றத் தில் அரசின் ரயில்வே பட் ஜெட்டை, ரயில்வே அமைச் சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தது அவரது சொந்த வரவு-செலவு அறிக்கை அல்ல; மம்தா கட்சியும் இணைந்து பங்கேற்றுள்ள மன்மோகன் அரசின் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய் தார். நாட்டின் அனைத்து துறைகளையும் தனியார்மய மாக்கி நாசமாக்கும் மன் மோகன் அரசின் கொள்கை யின் ஒரு பகுதியாக, ரயில்வேத் துறையில் பயணிகள் மீது கட் டணச் சுமையை ஏற்றும் அறி விப்புகளும், ரயில்வேத் துறை யின் பல்வேறு பகுதிகளை படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்கும் ஆபத்தான அறிவிப்புகளும் இந்த பட் ஜெட்டில் இடம்பெற்றன.


ஆனால், அமைச்சரவை யில் இந்த கொள்கைகளுக்கு தலையாட்டிவிட்டு, அமைச்சர கங்களில் இந்த கொள்கை களின் அடிப்படையில் முடிவு களையும் செயல்திட்டங்களை யும் வரையறுத்துவிட்டு, நாடா ளுமன்றத்திலும் அரசாங்கத்து டன் சேர்ந்து அறிவிப்புகளும் செய்துவிட்டு, வெளியில் அதை எதிர்த்து அறிக்கை கொடுத்து, ஆர்ப்பாட்டம் செய்து மேற்கு வங்க மக்களையும் நாட்டு மக்க ளையும் முட்டாளாக்க முயல் வது மம்தா பானர்ஜியின் வழக்கமாகிவிட்டது.

ஏற்கெனவே விலைவாசி உயர்வு பிரச்சனையாக இருந் தாலும் சரி, சில்லரை வர்த்தகத் தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான அறிவிப்பாக இருந்தாலும் சரி, அனைத்தை யும் அமைச்சரவையில் ஒப்புக் கொண்டுவிட்டு, மக்களவை யிலும் கூட ஒப்புக்கொண்டுவிட்டு மாநிலங்களவையிலும் வெளி யிலும் வந்து அதை எதிர்த்து அறிக்கை கொடுத்து, மக்கள் நலனுக்கு ஆதரவாக தான் இருப்பதைப்போல காட்டிக் கொள்ள முயன்றார் மம்தா பானர்ஜி.

தற்போதும் ரயில்வே பட் ஜெட்டில் கட்டண உயர்வு உள் ளிட்ட மக்கள் விரோத அறி விப்புகள் வந்திருப்பதை கடு மையாக எதிர்ப்பதாகவும், அதை அந்த அறிவிப்பை வெளியிட்ட தனது கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும், தனது கட்சியின் மற்றொரு அமைச் சரை அப்பொறுப்பில் நிய மிக்க வேண்டுமென்றும் புதிய தொரு மெகா நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதல் கடந்த 36 மணி நேரமாக மம்தாவின் இந்த நாடகத்தை தேசிய செய் திச் சேனல்கள் விடாமல் ஒளி பரப்பிக்கொண்டிருக்கின்றன. இந்த சேனல்கள் அனைத்தும், ரயில் கட்டண உயர்வுக்கு எதி ராக, தனது கட்சி அமைச் சரையே பதவியிலிருந்து நீக்கு மாறு குரல்கொடுத்துவிட்டார் என்று இந்த நாடகத்திற்கு பொழிப்புரையும் எழுதிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் ஆட் சிக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக போக்கு காட்டிவிட்டு, அடுத்த நிமிடமே அப்படியில்லை என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திரிணாமுல் கட்சி, இந்த முறையும் அதே போல கூறியது; அடுத்த நிமி டமே அரசாங்கம் பாதுகாப் புடன் இருக்கிறது என்றும், ஆதரவு வாபஸ் என்ற பேச் சுக்கே இடமில்லை என்றும் திரிணாமுல் கட்சி கூறியது.

மம்தாவின் இந்த நாட கத்தை ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியின் பேட்டி யும் அம்பலப்படுத்தியது. "நான் அமைச்சர் என்ற முறையில் எனது கடமையைச் செய்தேன்.மம்தாவுடன் ரெயில்வே பட்ஜெட் பற்றி கலந்தாலோசித்தேன். பதவியிலிருந்து விலகுமாறு பிரதமரோ அல்லது மம்தா பானர்ஜியோ என்னைக் கேட் டுக் கொண்டால் விலகிக் கொள்வேன்" என்று வங்காள மொழி செய்திச் சேனலான ஸ்டார் ஆனந்தாவுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். நாடாளுமன்ற அமர்வுகளிலும் கலந்து கொண்டார்.கலந்தாலோசித்ததாகக் கூறினீர்களே என்று அமைச்சரிடம் கேட்டால்'மம்தாவுடன் ஆலோசனை செய்தது உண்மைதான்.ஆனால் மம்தா வங்க திட்டங்கள் பற்றி மட்டுமே அவர் ஆலோசனைகள் கூறினார்".என்றுள்ளார்.
மொத்தத்தில் நான் அடிப்பது போல் அடிக்கிறேன்.நீ அழுவதுபோல் நடி நாடகம்தான்.

இதிலிருந்தே ஒரு கண் துடைப்புக்காகவே, அமைச்சரை மாற்ற வேண்டுமென்று மம்தா பானர்ஜி செய்தியை பரப்பியிருக்கிறார் என்றும் தெரியவருகிறது.

அவரது எண்ண ஓட்டத் தை புரிந்துகொண்ட திரிணா முல் எம்.பி.க்கள், நாடாளு மன்ற வளாகத்திலும் ஒரு நாட கத்தை நடத்தினர். தினேஷ் திரி வேதியை ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டு மென்றும், முகுல்ராயை ரயில்வே அமைச்சராக்க வேண்டுமென்றும் மகாத்மா காந்தி சிலை முன்பு நின்று கொண்டு பத்திரிகையாளர்கள் முன்பு கோஷம் போட்டுக் கொண்டனர்.

நாடகத்தின் பரபரப்பு காட் சிகள் அரங்கேறிக் கொண் டிருந்த போது, தினேஷ் திரி வேதி தனது பதவியை ராஜி னாமா செய்யவில்லை என்றும், அப்படி ஏதேனும் முடிவை அறிவித்தால் அதுபற்றி அவைக்கு தகவல் அளிக்கப்படும் என்றும் மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதி லளித்தபோது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி அரசுத் தலைவர் களிடம் ஏதும் பேசியதாக அவர் தெரிவிக்கவில்லை.

மக்களவையில் இப்பிரச் சனையை எழுப்பிய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாசுதேவ் ஆச்சார்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர் குருதாஸ் தாஸ் குப்தா, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ஐக்கிய ஜனதாத் தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட் டோர் அரசுக்கும் மம்தாவின் இரட் டை வேடத்திற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். தொடர்ந்து அமளி நிலவியது.

மாநிலங்களவையில் இப் பிரச்சனையை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, ரயில்வே பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த அமைச்சர் இன்றைக்கு பதவியில் இல்லாதது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்து வது குறித்தும், இதுபோன்ற நிலைமை நாடாளுமன்ற வர லாறு காணாத ஒன்று என்றும் கடுமையாக சாடினார்.

அப்போது பதிலளித்த நாடாளுமன்ற அலுவல்துறை இணையமைச்சர் ராஜீவ் சுக்லா, ரயில்வே அமைச்சரி டமிருந்த எந்தவொரு ராஜி னாமா கடிதமும் பிரதமருக்கு வரவில்லை என்று விளக்கமளித்தார்.

மொத்தத்தில் நாடாளுமன் றத்திலும், நாடாளுமன்றத் திற்கு வெளியிலும், ஊடகத் தளத்திலும் ரயில்வே பட்ஜெட் டின் மிகக் கடுமையான பாதக மான அம்சங்கள் குறித்த விவா தங்கள் இடம்பெறுவதற்கு பதி லாக, தனது மெகா நாடகத்தின் மூலமாக ஒட்டுமொத்த விவா தத்தையும் ரயில்வே அமைச் சரைப் பற்றியதாக திசைதிருப் பினார் மம்தா பானர்ஜி.
இவரின் நாடகம் இருக்கட்டும் லல்லு பிரசாத் யாதவ் காலத்தில் 7000 கோடிகள் உபரி பட்ஜெட்டாக இருந்த ரெயில்வே பிராண வாயு செலுத்தும் அளவு சீர்கெட்டது ஏன்?எப்படி??
மே.வங்க முதல்வராகும் வரை மம்தாதானே ரெயில்வே அமைச்சர்.அவரின் செய்ல்பாடுகள்தான் காரணமா?
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger